Published:Updated:

அரியலூர்: `கூலி வேலைக்குச் சென்ற தாய்; 4 வயது சிறுமிக்கு வன்கொடுமை!'- போக்சோவில் கைதான உறவினர்

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த மணிகண்டன்
சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த மணிகண்டன்

சிறுமியின் தாய் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பின்னர், மணிகண்டன் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது.

அரியலூர் அருகே தாய் கூலி வேலைக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த 4 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில், சிறுமியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். திருப்பூரில் வேலை செய்துவந்த மணிகண்டன், கொரோனா ஊரடங்கு காரணமாக தனது சொந்த ஊருக்கு வந்து, விவசாயப் பணிகளை செய்துவந்திருக்கிறார்.

மணிகண்டன், அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினரான பெண் ஒருவரின் வீட்டுக்கு சென்று வந்திருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு 4 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். பெண்ணின் கணவர் திருப்பூரில் வேலை செய்வதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 26-ம் தேதி சிறுமியின் தாய் கூலி வேலைக்குச் சென்றுவிட்டார்.

திருச்சி: `மனநலம் பாதித்த பெண் வன்கொடுமை; ஹெச்.ஐ.வி நாடகம்!' - சிக்கிய ஆட்டோ கும்பல்

அந்த சமயத்தில் மணிகண்டன் அவரது வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது வீட்டில் தனியாக விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை மணிகண்டன் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதையடுத்து நேற்று அந்தச் சிறுமி, வலி தாங்க முடியாமல் கதறியிருக்கிறார். அதைப் பார்த்துப் பதறித் துடித்த சிறுமியின் தாய், மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்ரிருக்குறார். பிறகு இது தொடர்பாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீஸார் மணிகண்டனைக் கைதுசெய்து, விசாரித்துவருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து விசாரித்தோம். நம்மிடம் பேசிய அந்தப் பகுதியினர்,``வீட்டில் ஆள் இல்லாததை அறிந்துகொண்ட மணிகண்டன், நான்கு வயதே ஆன சிறுமியை, `கடைக்குப் போகலாம் வா...’ என அழைத்துக்கொண்டு அடுத்த தெருவிலுள்ள தன் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். வீட்டில் யாரும் இல்லாததைப் பயன்படுத்திக்கொண்ட மணிகண்டன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

மணிகண்டன்
மணிகண்டன்

தனக்கு என்ன நடந்தது என்பதை சொல்ல்லக்கூடத் தெரியாத அந்தச் சிறுமி, இரண்டு தினங்களாக வலியோடு தவித்திருக்கிறாள். ஒரு கட்டத்தில் வலியைப் பொறுக்க முடியாமல் அழுதிருக்கிறார். இதையடுத்து, அந்தச் சிறுமியின் தாய், `மகளுக்கு உடம்பு சரியில்லை. ஆஸ்பத்திரிக்கு அழைச்சிக்கிட்டுப் போகணும்' என்று தனது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனையே உதவிக்கு அழைத்தது பெரும் கொடுமை.

ஒன்றும் தெரியாததைப்போல் வந்த அந்தக் கொடூரனைப் பார்த்துமே அந்தச் சிறுமி நடுங்கியிருக்கிறாள். தன் தாயின் புடவைக்குள் மறைந்திருக்கிறார். இதையடுத்து ஆட்டோ ஒன்றில் சிறுமியை அழைத்துக்கொண்டு இருவரும் ஆஸ்பத்திரிக்குச் சென்றபோதும், சிறுமி பயத்தில் நடுங்கியபடியே சென்றிருக்கிறார்.

ஒடிசா: `பாலியல் தொல்லை; கருக்கலைப்பு!’ - 13 வயதுச் சிறுமி விவகாரத்தில் சிக்கிய இன்ஸ்பெக்டர்

மருத்துவமனையில் சேர்த்த பிறகு, சிறுமியின் பிறப்புறுப்பில் காயங்கள் இருப்பதைக் கண்டு சிறுமியின் தாயும் மருத்துவமனையில் இருந்தவர்களும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். கலங்கித் துடித்த தாய், `என்னாச்சு பாப்பா. உன்னை யார் இப்படிச் செஞ்சது?' எனக் கண்ணீருடன் கேட்டிருக்கிறார். `மணிகண்டன் மாமாதான் வீட்டுக்கு வந்து என்னை அழைச்சுக்கிட்டு போனாங்க...' என திக்கித் திணறி பதில் சொல்லியிருக்கிறார் அந்தச் சிறுமி. `கூடவே இருந்துக்கிட்டு இப்படி செஞ்ச்சுட்டானே...' என அழுது புலம்பியபடியே சிறுமியின் தாய் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பின்னர் மணிகண்டன் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. அவர்மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு