Published:Updated:

``இவர்களால் மக்களுக்கு ஆபத்து..!"- மிளகாய்ப் பொடி கொள்ளையர்களுக்கு குண்டாஸ்

அரியலூர் எஸ்.பி ஆபீஸ்

மிளகாய்ப் பொடி தூவி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இளைஞர்களை குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.

``இவர்களால் மக்களுக்கு ஆபத்து..!"- மிளகாய்ப் பொடி கொள்ளையர்களுக்கு குண்டாஸ்

மிளகாய்ப் பொடி தூவி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இளைஞர்களை குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.

Published:Updated:
அரியலூர் எஸ்.பி ஆபீஸ்

அரியலூர் மாவட்டத்தில் இரும்புலிக்குறிச்சி, செந்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் டூவீலரில் செல்பவர்கள் மீது மிளகாய்ப் பொடி வீசி அவர்களின் உடமைகளை சிலர் தொடர்ச்சியாக கொள்ளையடித்து வந்தனர். அதையடுத்து, கொள்ளையர்களைப் பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்த நிலையில், இந்தக் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த, செந்துறை பூமுடையான் குடிகாடு மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சொக்கு என்கிற ராஜேஷ்,

அரியலூர்
அரியலூர்

அதே பகுதியைச் சேர்ந்த சின்னு என்கிற ராஜேஷ் ஆகிய இருவரையும் கடந்த ஜனவரி மாதம் அரியலூர் மாவட்ட தனிப் படை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் சின்னு என்கிற ராஜேஷ் மீது வீட்டினுள் புகுந்து கொள்ளையடித்த வழக்கு உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சின்னு
சின்னு

இந்நிலையில், குற்றவாளிகள் இருவரும் வெளியே வந்தால் மேலும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதாலும் அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க அரியலூர் எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்தார். அதையடுத்து, அவரின் பரிந்துரை பேரில் ஆட்சியர் ரமண சரஸ்வதி இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism