Published:Updated:

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம்; வெளியானது இரண்டாவது வீடியோ!

பள்ளி மாணவி தற்கொலை

அந்த வீடியோவைப் பதிவு செய்த நபர் மாணவியிடம், `பள்ளியில் பொட்டு வைக்கக் கூறினார்களா?' எனக் கேட்கிறார். அதற்கு அந்த மாணவி, `அப்படியெல்லாம் இல்லை' என்கிறார்.

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம்; வெளியானது இரண்டாவது வீடியோ!

அந்த வீடியோவைப் பதிவு செய்த நபர் மாணவியிடம், `பள்ளியில் பொட்டு வைக்கக் கூறினார்களா?' எனக் கேட்கிறார். அதற்கு அந்த மாணவி, `அப்படியெல்லாம் இல்லை' என்கிறார்.

Published:Updated:
பள்ளி மாணவி தற்கொலை

தஞ்சாவூரைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் மாணவி படித்த பள்ளியில் ஹாஸ்டல் வார்டன் கிறிஸ்துவ மதத்துக்கு மாறச் சொல்லி அழுத்தம் கொடுத்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக வெளியான தகவல் தமிழகத்தையே உலுக்கியது. அது தொடர்பான விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், அந்த மாணவி பேசிய இரண்டாவது வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டி கிராமத்தில் உள்ள துாய இருதய மேல்நிலைப்பள்ளியில் ஹாஸ்டலில் தங்கியபடி பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்தார். அந்த மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அதையடுத்து, அந்த மாணவி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அந்த மாணவி கடந்த 19-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பள்ளி
பள்ளி

தன்னை கிறிஸ்துவ மதத்துக்கு மாறுமாறு விடுதி வார்டன் கட்டாயப்படுத்தியதாக மாணவி தெரிவித்த வீடியோ, கடந்த 20-ம் தேதி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவியது. இது தொடர்பாக திருக்காட்டுள்ளி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டதுடன், விடுதி வார்டனான சகாயமேரி என்பவரையும் கைதுசெய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பா.ஜ.க போராட்டம்
பா.ஜ.க போராட்டம்

இதற்கிடையில் மாணவியின் தந்தை, தன் மகளை மதம்மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகக் கூறியும், சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தக் கோரியும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனு விசாரணையில் இருந்துவருகிறது. இந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், மாணவி மத மாற்றம் தொடர்பாகப் பேசும் வீடியோவை எடுத்த அரியலூர் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத்தின் செயலாளரான முத்துவேல் என்பவர், வல்லம் டி.எஸ்.பி அலுவலகத்தில் விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி பிருந்தாவிடம் மாணவி பேசும் வீடியோவைப் பதிவுசெய்த தனது செல்போனை ஒப்படைத்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதைப் பெற்றுக்கொண்ட போலீஸார் சென்னையில் உள்ள தடயவியல் நிபுணர்களுக்கு அதை ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். இந்த நிலையில், உயிரிழந்த மாணவி தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

அதில் அந்த மாணவி, பள்ளி வார்டன் தன்னைத் தேவையில்லாமல் வேலை வாங்கியதால், தன்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல்போனதாகவும், அதன் காரணமாகேவ விஷம் குடித்து தான் தற்கொலைக்கு முயன்றதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

தஞ்சை மாணவி தற்கொலைச் சம்பவம்
தஞ்சை மாணவி தற்கொலைச் சம்பவம்

அதேபோல, அந்த வீடியோவைப் பதிவு செய்த நபர் மாணவியிடம், `பள்ளியில் பொட்டு வைக்கக் கூறினார்களா?' எனக் கேட்கிறார். அதற்கு அந்த மாணவி, `அப்படியெல்லாம் இல்லை' என்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டுவருகிறது. இந்த வீடியோ மாணவி தற்கொலை விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism