Published:Updated:

`நல்லா எழுதியிருக்கேன்; கொஞ்சம் பயமா இருக்கு' - நீட் தேர்வு எழுதிய அரியலூர் மாணவி தற்கொலை

கதறி அழும் உறவினர்கள்
கதறி அழும் உறவினர்கள்

டாக்டராக வேண்டும் என்கிற கனவில் நீட் தேர்வுக்குப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த கனிமொழி, தஞ்சாவூரில் நீட் தேர்வை எழுதியிருக்கிறார். நேற்று மாலை கனிமொழி அவரின் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த சேலம் தனுஷின் நினைவலைகள் மறைவதற்குள், அரியலூரில் கனிமொழி என்கிற மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனிமொழி
கனிமொழி

நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. தமிழகத்தில் 18 மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட மையங்களில் 1,12,889 மாணவர்கள் நீட் தேர்வை எழுதினார்கள்.

அரியலூர்
அரியலூர்

நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த சேலம் மாவட்டம், கூளையூரைச் சேர்ந்த தனுஷ் என்கிற மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மனதிலிருந்து விலகுவதற்கு முன்பே, மற்றொரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அரியலூர் மாவட்டம், சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவ்ரின் மனைவி ஜெயலெட்சுமி. இருவரும் வழக்கறிஞர்கள். இவர்களுக்கு இரண்டு மகள்கள். இரண்டாவது மகள்தான் கனிமொழி. நாமக்கல் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் 562.28 மதிப்பெண் பெற்றிருந்தார்.

நீட் தேர்வால் உயிரிழந்த கனிமொழி
நீட் தேர்வால் உயிரிழந்த கனிமொழி

டாக்டராக வேண்டும் என்கிற கனவில் நீட் தேர்வுக்குப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த கனிமொழி, தஞ்சாவூரிலுள்ள தாமரை இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் நீட் தேர்வை எழுதியிருக்கிறார். இந்தநிலையில் நேற்று மாலை மாணவி கனிமொழி அவரின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் மாணவியின் பெற்றோர் கதறி அழுத சம்பவம் மனதை உருக வைத்திருக்கிறது. நீட் தேர்வு தோல்வி பயத்தால் அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகப் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீட் தேர்வு: ``மாணவர்கள் விபரீத முடிவு எடுக்கக் கூடாது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்!

`நீட் தேர்வு நல்லா எழுதியிருக்கேன். நான் பாஸ் ஆகிடுவேன். ஆனாலும், கொஞ்சம் பயமா இருக்கு’ என பெற்றோரிடமும் நேற்றிரவு லேசாக வருத்தப்பட்டிருக்கிறாராம் கனிமொழி. எதுவாக இருந்தாலும் பாத்துக்கலாம்’ என்று கனிமொழியின் தந்தை அவரின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

கதறி அழும் உறவினர்கள்
கதறி அழும் உறவினர்கள்

அப்படியிருந்தும் மன வேதனையில் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரின் உறவினர்கள் தரப்பில் சொல்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு