Published:Updated:

நிர்வாணமாக வீடியோ கால், ஸ்கிரீன் ரெகார்ட்; வன்கொடுமை செய்யும் கும்பல்!-ராணுவ வீரரைத் தேடும் போலீஸ்

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டுவரும் ராணுவ வீரர் சஜித்
News
பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டுவரும் ராணுவ வீரர் சஜித்

பெண்களை வளைத்து வாட்ஸ்அப் வீடியோ காலில் நிர்வாணமாக வரவைத்து, அதைப் பதிவுசெய்து பாலியல் தொல்லை கொடுக்கும் கும்பலின் நெட்வொர்க் கன்னியாகுமரியை அதிரவைத்திருக்கிறது.

மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அருமனைப் பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி இந்த மாதத் தொடக்கத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அந்த மாணவி ஒரு வழிபாட்டுத்தலத்தில் சிறுசேமிப்புத் திட்டத்தில் பணம் கலெக்‌ஷன் செய்வதைச் சேவையாக செய்துவந்திருக்கிறார். சிறுசேமிப்பு கலெக்‌ஷன் தொகையை அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் கடனாகப் பெறுவதும், சில நாள்களில் திருப்பிக் கொடுப்பதும் வழக்கமாக இருந்துவந்திருக்கிறது. சிறுசேமிப்பு முடிவடைந்த நிலையில் கடன் கொடுத்த பணம் வசூலாகாததால் 50,000 ரூபாயைக் கையிலிருந்து கொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, உறவினர் முறையான மேல்பாலையைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ என்பவரிடம் 50,000 ரூபாய் கடன் கேட்டிருக்கிறார் மாணவி.

கிரிஸ்
கிரிஸ்

அதற்கு ஜான் பிரிட்டோ, ``உன் தோழிக்கு அவசரத் தேவை என்று கூறி உன் அக்காவிடமிருந்து ஐந்து பவுன் தங்க நகை வாங்கிக்கொண்டு வா. அதை கூட்டுறவு வங்கியில் முன்தேதியிட்டு அடகுவைத்து விவசாய நகைக்கடனாக ஒரு லட்சம் ரூபாய் வாங்கலாம். அதில் 50,000 ரூபாயை உனக்குத் தருகிறேன். 50,000 ரூபாயை நான் எடுத்துக்கொள்கிறேன். தமிழக அரசு உடனடியாகத் தங்கநகைக் கடனைத் தள்ளுபடி செய்யும். அப்போது நகையை எடுத்து உன் அக்காவுக்குக் கொடுத்துவிடலாம். இதனால், நம் இரண்டு பேருக்கும் லாபம்’’ என்று கூறியிருக்கிறார்.

மாணவியும் தன் அக்காவிடமிருந்து நகைகளை வாங்கி ஜான் பிரிட்டோவிடம் கொடுத்திருக்கிறார். அவர் பணமும் நகையும் கொடுக்காமல் இழுத்தடித்திருக்கிறார். இது பற்றி மாணவி தொடர்ச்சியாகக் கேட்கவே, `என் நண்பன் சஜித் ராணுவத்தில் இருக்கிறான். அவனிடம் உன் நிலையைக் கூறியிருக்கிறேன். அவன் உனக்கு போன் பண்ணுவான்’ என்று கூறியிருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதையடுத்து ராணுவ வீரர் சஜித் அந்த மாணவிக்கு போன் செய்து `என்னை உன் அண்ணன்போல நினைத்துக்கொள்’ என்று முதலில் நட்பாகப் பேசியிருக்கிறார். பின்னர் அவரின் சுயரூபம் வெளிப்பட்டது. `உன் அக்காவிடமிருந்து யாருக்கும் தெரியாமல் நகை வாங்கியதை, உன் அக்கா கணவரிடம் சொல்லி குடும்பத்தைப் பிரித்துவிடுவேன். அப்படிச் செய்யாமல் இருக்க வீடியோ காலில் நிர்வாணமாக வா’ என்று மிரட்டியிருக்கிறார். வேறு வழியில்லாமல் இரண்டு முறை வீடியோ காலில் நிர்வாணமாக அந்த மாணவி பேசியிருக்கிறார். அதை சஜித், ஸ்கிரீன் வீடியோ ரெக்கார்ட் செய்துவைத்திருக்கிறார்.

கைதுசெய்யப்பட்ட ஜான் பிரிட்டோ
கைதுசெய்யப்பட்ட ஜான் பிரிட்டோ

கடந்த செப்டம்பர் மாதம் சஜித் விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது, அந்த மாணவியின் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் அங்கு சென்று, ``நிர்வாண வீடியோவை இணையதளத்தில் பரப்பிவிடுவேன்” என்று மிரட்டி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறர். அதன் பிறகு சஜித் தன் நண்பர்களான கிரிஷ், லிபின் ஜான் ஆகியோருக்கு வீடியோவை அனுப்பியதுடன், அந்த மாணவியின் மொபைல் நம்பரையும் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். அவர்களும் வீடியோவைக் காட்டி மாணவியை வன்கொடுமை செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். மாணவி ஒப்புக்கொள்ளாமல் போகவே, அந்த வீடியோவை சமூக வலைதளங்கள் மூலம் பரப்பியிருக்கிறார்கள். இதையடுத்து அந்த மாணவி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். போலீஸார் வழக்கு பதிவுசெய்து பெண்ணின் உறவினரான ஜான் பிரிட்டோ, லிபின் ஜான் ஆகியோரைக் கைதுசெய்துள்ளார்கள். ஏ ஒன் குற்றவாளியான ராணுவ வீரர் சஜித், மற்றொரு ராணுவ வீரர் கிரிஷ் ஆகியோர் தலைமறைவாக இருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வழக்கை விசாரித்த போலீஸாருக்கு சஜித்தின் லீலைகள் குறித்து மேலும் சில வீடியோக்கள் கிடைத்துள்ளன. அதில் சஜித் பெண்களை வீடியோ காலில் வரவைத்து, அவர்களின் அங்கங்களைக் காட்டுமாறு கூறி சுய இன்பம் செய்யும் வீடியோக்களும் அடக்கமாம். இவர்கள் பெண்களை எப்படி வளைக்கிறார்கள் என்பது பற்றி விசாரணையில் இறங்கினோம். ``மேல்பாலையைச் சேர்ந்த ராணுவ வீரர் சஜித் உட்பட சிலர் ஒன்றாக இணைந்து பெண்களை வலையில் வீழ்த்துவதையே வாடிக்கையாகக்கொண்டிருக்கிறார்கள். சிலர் பெண்களைக் காதலிப்பதாகக் கூறி அவர்களின் தோளில் கைபோட்டு போட்டோ எடுப்பார்கள். பின்னர் அந்த போட்டோவை வீட்டில் உள்ளவர்களுக்கு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டி நிர்வாணமாக வீடியோ காலில் வரவைப்பார்கள். வீடியோ காலை ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்து, அதைக் காட்டி மிரட்டி வீட்டில் யாருமில்லாத சமயத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகிறார்கள். ஒருவர் வலையில் வீழ்த்திய பெண்ணின் விவரத்தை மற்றவர்களுக்குப் பரிமாற்றம் செய்வது வழக்கம்

கைதுசெய்யப்பட்ட லிபின் ஜான்
கைதுசெய்யப்பட்ட லிபின் ஜான்

மேல்பாலை பகுதியிலுள்ள சஜித்தின் நண்பர்களிடம் பத்துக்கும் மேற்பட்ட பெண்களின் வீடியோக்கள் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சஜித்துக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறது. ஆனாலும், திருமணம் ஆகாத பெண்களைக் குறிவைத்து பாலியல் தொல்லை கொடுப்பதுதான் அவரின் வேலை. மார்த்தாண்டம் பகுதியில் பாதிக்கப்பட்ட சில பெண்கள் குடும்ப மானம் போய்விடக் கூடாது என்று புகார் கொடுக்காமல் இருக்கிறார்கள். இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களைக் கைதுசெய்தால் பல பெண்களின் மானம் காப்பாற்றப்படும்’’ என்கிறார்கள் அருமனைப் பகுதிவாசிகள்.

மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானபிரகாஷிடம் இது குறித்துப் பேசினோம். ``சஜித் குறித்த வேறு சில வீடியோக்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அதிலுள்ள பெண்கள் யாரெனத் தெரியவில்லை. புகார் வந்தால்தான் அதன்மீது நடவடிக்கை எடுக்க முடியும். சஜித் எந்த பட்டாலியனில் இருக்கிறார் என்பது குறித்த தகவலை விசாரித்துக்கொண்டிருக்கிறோம். அந்தத் தகவல் கிடைத்ததும், வழக்கு பற்றி அவர்களுக்குத் தகவல் சொல்லி நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.