Published:Updated:

₹2 லட்ச கடனை அடைக்க சிறுமிக்கு திருமணம் செய்ய முயன்ற தாய்; போலீஸ் விசாரணை!

harassment
harassment

ரூ.2 லட்சம் கடனுக்காக 40 வயது நபருக்குத் தன்னை திருமணம் செய்துவைக்க நிர்வாணப்படுத்தி சூடு வைத்ததாக, தாய் மீதே பரபரப்பு புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார், 15 வயதுச் சிறுமி ஒருவர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி, இந்தாண்டு பத்தாம் வகுப்பு முடித்திருக்கிறார். மேற்கொண்டு டிப்ளோமா படிக்க விரும்பிய இவர், அதற்கான வேளையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், அவர் தன் அத்தையுடன் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ``நான் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளோமா படிக்க விரும்புகிறேன். என் அம்மாவோ, பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 40 வயது ஆணுடன் எனக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைக்க முயக்கிறார்.

அரக்கோணம்
அரக்கோணம்
ஊரடங்கு காலத்தில் குழந்தை திருமணம்; போக்சோ சட்டத்தின் கீழ் 4 பேர் கைது!

திருமணத்துக்கு நான் மறுத்து வந்ததால், பெற்ற மகள் என்றும் பார்க்காமல், எனது கன்னம் மற்றும் தொடையில் சூடு போட்டுவிட்டார். மேலும், கழுத்தில் கத்தியால் கீறியதற்கான தழும்பும் இருக்கிறது. இந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்னர் இரவில் திடீரென என்னை நிர்வாணப்படுத்தி அடித்து சித்ரவதை செய்தார்.

நான் செய்வதறியாமல், கையில் கிடைத்த துப்பட்டாவுடன் என் அத்தை வீட்டுக்குள் ஓடிச்சென்று நடந்த கொடுமைகளைக் கூறினேன். அதுமட்டுமன்றி, என்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்பிய 40 வயது ஆண், என் தாய் வாங்கிய ரூ.2 லட்சம் கடனை அடைப்பதாகக் கூறியிருக்கிறார்.

Girl - Representational Image
Girl - Representational Image
Pixabay
கோவை: கடன் பிரச்னை; இன்ஸ்டாகிராம் தோழியின் குழந்தையைக் கடத்திய இளைஞர்! - அதிர்ச்சிச் சம்பவம்

அதற்கு ஆசைப்பட்டுதான் என்னை அவருக்குத் திருமணம் செய்துகொடுக்கத் தாய் திட்டமிட்டிருக்கிறார். நான் திருமண வயதை இன்னும் எட்டவில்லை. தாயின் கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்ததால், அதைத் தாங்க முடியாமல் `சைல்டு லைன்’ அமைப்புக்குப் புகார் தெரிவித்துவிட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சைப் பெற்றேன். எனக்கு தந்தை கிடையாது. தாயிடமிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.

புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட போலீஸார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு