Published:Updated:

``திருடுவேன், பெட்ரோல் தீரும்வரை ஓட்டுவேன்... விட்டுவிடுவேன்!" - போலீஸில் சிக்கிய பலே பைக் திருடன்

கைது

``பெட்ரோல் இருக்கும் வரை ஓட்டுவேன். அதன்பிறகு அதை விட்டுவிட்டு வேறு பைக் திருடுவேன்." - கைதான இளைஞர்

``திருடுவேன், பெட்ரோல் தீரும்வரை ஓட்டுவேன்... விட்டுவிடுவேன்!" - போலீஸில் சிக்கிய பலே பைக் திருடன்

``பெட்ரோல் இருக்கும் வரை ஓட்டுவேன். அதன்பிறகு அதை விட்டுவிட்டு வேறு பைக் திருடுவேன்." - கைதான இளைஞர்

Published:Updated:
கைது

மகாராஷ்டிரா மாநிலம், புனே போலீஸார் கடந்த சனிக்கிழமை அன்று வழக்கம் போல் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இளைஞர் ஒருவர் பைக்கில் வந்திருக்கிறார். அவரை மடக்கி விசாரித்ததில், அவர் பயணித்த பைக் தொடர்பாக முரணான தகவல்களைத் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, போலீஸார் கடந்த சில மாதங்களாக தேடிவந்த குற்றவாளி என்பது உறுதியானது.

பைக் திருட்டு
பைக் திருட்டு
மாதிரிப் படம்

அந்த நபரை விசாரித்த போலீஸாருக்கு பல தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய போலீஸார், ``அந்த நபரை விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். அதன் பிறகுதான் அவரிடம் இருந்தது திருடிய பைக் எனத் தெரியவந்தது. மேலும், விசாரணையில் கடந்த சில மாதங்களாக பைக் திருட்டில் அந்த நபர் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. அவரது கைது குறைந்தது ஆறு திருட்டு வழக்குகளை தீர்க்க எங்களுக்கு உதவியது.

பெண் கைது
பெண் கைது
representational image

திருடப்பட்ட பைக்குகள் சில நாள்களில் பல்வேறு இடங்களில் கிடைத்துவிடும். அது தொடர்பாக அவரிடம் விசாரித்தபோது, `பைக்கை திருடி அதில் பெட்ரோல் இருக்கும் வரை ஓட்டுவேன். அதன்பிறகு அதை விட்டுவிட்டு வேறு பைக் திருடுவேன்' என வாக்குமூலம் அளித்தார். தற்போது வரை ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 4 பைக்குகளை மீட்டிருக்கிறோம். மேலும், விசாரித்து வருகிறோம்" எனத் தெரிவித்தனர்.