Published:Updated:

ரூ.10 லட்சம் செக் மோசடி வழக்கு: கரூர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட்

எஸ்.காமராஜ் (முன்னாள் எம்.எல்.ஏ)

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ காமராஜுக்கு, கரூர் விரைவு நீதிமன்றம் செக் மோசடி வழக்கில் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ரூ.10 லட்சம் செக் மோசடி வழக்கு: கரூர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட்

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ காமராஜுக்கு, கரூர் விரைவு நீதிமன்றம் செக் மோசடி வழக்கில் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
எஸ்.காமராஜ் (முன்னாள் எம்.எல்.ஏ)

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2011 - 2016 வரை அதிமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் எஸ்.காமராஜ். இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், தேர்தலுக்குச் சில நாள்களுக்கு முன்பு செந்தில் பாலாஜி தலைமையில் தி.மு.க-வில் இணைந்தார். அதன் பிறகு, தி.மு.க-விலும் அவர் பெரிதாக சோபிக்கவில்லை.

இந்த நிலையில், கரூர் ஆண்டான்கோயில் கிழக்கு அம்பாள் நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரிடம் காமராஜ், கடந்த 20.01.2020-ல் அவசரத் தேவைக்காக ரூ. 10 லட்சம் வரை கடன் வாங்கியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், காமராஜ் சரியாக வட்டி கட்டாமல் இழுத்தடித்துவந்ததாகவும் தெரிகிறது. ராமச்சந்திரன் அசலை பலமுறை கேட்க, காமராஜ் 2020 ம் ஆண்டு, டிசம்பர் 21 -ம் தேதி கொடுத்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணமில்லாமல் திரும்பியதால், கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் காசோலை சம்பந்தமான விரைவு நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடர்ந்தார் ராமச்சந்திரன்.

எஸ்.காமராஜ் (முன்னாள் எம்.எல்.ஏ)
எஸ்.காமராஜ் (முன்னாள் எம்.எல்.ஏ)

இந்த வழக்கில் நான்கு முறை சம்மன் அனுப்பப்பட்டும், முன்னாள் எம்.எல்.ஏ காமராஜ் நேரில் ஆஜராகவில்லையாம். அதைத் தொடர்ந்து, நேற்று நீதிபதி சரவணபாபு, காமராஜுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இது குறித்து, காமராஜ் தரப்பில் பேசினால், "கடன் தொகையைச் செலுத்த அவகாசம் கேட்ட நிலையில், காமராஜைப் பிடிக்காத சிலர் தூண்டுதலின்பேரில் அவசர அவசரமாக வழக்கு தொடுக்கப்பட்டது. அண்ணன் வழக்கைச் சட்டப்படி சந்திப்பார்" என்றனர். இதற்கிடையில், சில வாரங்களுக்கு முன்பு இதே நீதிமன்றத்தில் குளித்தலை தி.மு.க எம்.எல்.ஏ மாணிக்கத்துக்கு காசோலை வழக்கில் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்த நிலையில், தற்போது அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்குத் தாவிய முன்னாள் எம்.எல்.ஏ காமராஜுக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ள சம்பவம், கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism