Published:Updated:

சென்னை: பள்ளிக்குச் செல்ல மறுத்த சிறுமி - விசாரித்ததில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பாலியல் தொல்லை

சென்னையில் ஐந்து வயது சிறுமி ஒருவர் பள்ளிக்குச் செல்ல மறுத்திருக்கிறார். அந்தச் சிறுமியிடம் பெற்றோர் விசாரித்ததில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

சென்னை: பள்ளிக்குச் செல்ல மறுத்த சிறுமி - விசாரித்ததில் வெளியான அதிர்ச்சித் தகவல்

சென்னையில் ஐந்து வயது சிறுமி ஒருவர் பள்ளிக்குச் செல்ல மறுத்திருக்கிறார். அந்தச் சிறுமியிடம் பெற்றோர் விசாரித்ததில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
பாலியல் தொல்லை

சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் ஐந்து வயது மகள், அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்துவருகிறார். கடந்த சில தினங்களாக அந்த மாணவி பள்ளிக்குச் செல்லவில்லை. நேற்று காலை சிறுமியைப் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் முயன்றனர். இருந்தபோதிலும், அந்தச் சிறுமி `நான் அந்தப் பள்ளிக்குப் போக மாட்டேன்’ என்று அடம்பிடித்திருக்கிறார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

பெற்றோர் வற்புறுத்தி, பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர். அப்போது அந்தச் சிறுமி `அந்தப் பள்ளிக்குச் செல்ல மாட்டேன்’ என்று சொல்லி பயந்து அழுதிருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், அந்தச் சிறுமியிடம் என்ன நடந்தது என்று விசாரித்திருக்கிறார்கள். அப்போது, அந்தச் சிறுமி தான் படிக்கும் பள்ளியில் பியூனாக வேலை செய்யும் ராஜ் (38) என்பவர், தன்னைத் தொட்டுத் தொட்டு பேசுவதாகப் பெற்றோர்களிடம் சொல்லி அழுதிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கைது
கைது

இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இந்தச் சம்பவம் தொடர்பாக பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்தப் புகாரை அடுத்து, பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த ராஜ் என்பவரை போக்சோ சட்டத்தில் கைதுசெய்து விசாரணை செய்துவருகின்றனர். ஐந்து வயது சிறுமிக்குப் பள்ளியில் பாலியல் தொல்லை நடந்திருக்கும் சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.