Published:Updated:

``என்னால முடியலை, நான் போறேன்..!" - நீட் தேர்வு எழுதவிருந்த மாணவன் தற்கொலை - சென்னையில் சோகம்

தற்கொலை - மரணம் ( சித்திரிப்புப் படம் )

சென்னையில் நீட் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்த மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

``என்னால முடியலை, நான் போறேன்..!" - நீட் தேர்வு எழுதவிருந்த மாணவன் தற்கொலை - சென்னையில் சோகம்

சென்னையில் நீட் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்த மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
தற்கொலை - மரணம் ( சித்திரிப்புப் படம் )

சென்னை, சூளைமேடு, சுப்பாராவ் நகர்ப் பகுதியில் வசித்துவருபவர் கிருஷ்ணமூர்த்தி. ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு இரண்டு மகன்கள். இவரின் இரண்டாவது மகன் தனுஷ் கடந்த ஆண்டு அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருந்தார். மருத்துவராகும் ஆசையுடன் இருந்த மாணவனுக்கு, கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சிபெற்றும் எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்காமல் போயிருக்கிறது. இதனால், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நீட் தேர்வுக்கு அந்த மாணவன் தீவிரமாகத் தயாராகிக்கொண்டிருந்தார்.

தற்கொலை செய்துகொண்ட மாணவன்
தற்கொலை செய்துகொண்ட மாணவன்

இந்தச் சூழலில், நேற்று மாலை மாணவனை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு, அவரின் பெற்றோர் வெளியில் சென்றிருக்கின்றனர். சுமார் 6:30 மணியளவில் அவரின் அம்மா வீட்டுக்குத் திரும்பி வந்து பார்த்தபோது, மாணவன் வீட்டின் படுக்கையறையில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தான். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் தாயார், கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்திருக்கிறார். உடனடியாகச் சத்தம் கேட்டு விரைந்தவர்கள், மாணவனை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியிருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைத் தொடர்ந்து, அந்த மாணவனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மாணவனைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். மாணவனின் உடல் அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து சூளைமேடு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள். தற்கொலை செய்துகொண்ட மாணவன், தற்கொலை தொடர்பாக தன் செல்போனில் வீடியோ ஒன்று பதிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்கொலை - மரணம்
தற்கொலை - மரணம்
சித்திரிப்புப் படம்

இது குறித்து மாணவரின் உறவினர் ஒருவரிடம் பேசினோம். ``அவன் ரொம்ப நல்லா படிக்கிற பையன். டாக்டர் ஆகணும்கிறது அவனோட ஆசை. அதுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சான். போன முறை பாஸ் ஆகியும் எம்.பி.பி.எஸ் கிடைக்கலை. கண்டிப்பா இந்த முறை எப்படியாது நல்ல மார்க் எடுக்க ரொம்ப முயற்சி செஞ்சுக்கிட்டிருந்தான். ஆனா, அவன் கொஞ்ச நாளாவே ரொம்ப மன உளைச்சலில் இருந்தான். நாங்க எல்லாருமே அவனுக்கு ஆறுதல் சொல்லி நல்லா படிக்கச் சொல்லிக்கிட்டிருந்தோம். கடைசியா அவன் பேசியிருந்த வீடியோவுல, `என்னால முடியலை... என்னால படிக்க முடியலை.... என்னால எதுவுமே முடியலை. நான் போறேன்... என்னோட சாவுக்கு யாரும் காரணம் கிடையாது. முழுக்க முழுக்க நான் மட்டுமே காரணம்'னு பேசியிருந்தான். எங்க பையனுக்கு நடந்த மாதிரி இனி யாருக்குமே நடக்கக் கூடாது. நீட் தேர்வை அரசு உடனடியாக ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கணும்" என்றார்.