Published:Updated:

சடலத்தின்மீது அமர்ந்த அகோரிகள்; மயானத்தில் அதிகாலை பூஜை! அதிர்ச்சியில் மக்கள்!

அவரது உடல் இறுதிச் சடங்கிற்காக திருச்சி அரியமங்கலத்தில் உள்ள சமுதாய நல்லிணக்க சுடுகாட்டுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருச்சி அரியமங்கலம் அருகிலுள்ள உய்யங்கொண்டான் வாய்க்காலை ஒட்டிய பங்குகளில் ``ஜெய் அகோராகாளி கோயில்” கட்டி பூஜை செய்து வருபவர் அகோரி மணிகண்டன். இவர் காசியில் தான் அகோரியாக தீட்சை பெற்றதாக கூறிக்கொண்டு தனது சீடர்களுடன் அந்த கோயிலில் இருக்கிறார்.

அகோரிகள்
அகோரிகள்

அங்கு, ஒவ்வொரு வாரமும் வெள்ளி, செவ்வாய் தினங்களிலும், அமாவாசை, பௌர்ணமி நாள்களிலும் பில்லி சூனியம், பேய் ஓட்டுதல், மாந்திரீக பூஜைகள் செய்வது வழக்கம்.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் குடிசை மாற்று வாரியத்தில் வசித்துவந்த வெங்கடேஷ் என்பவர் இரண்டு நாள்களுக்கு முன்பு கேரளா மாநிலம் பாலக்காட்டில் விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.

ஆட்டம் போடும் அகோரிகள்
ஆட்டம் போடும் அகோரிகள்

அவரது உடல் இறுதிச் சடங்கிற்காக திருச்சி அரியமங்கலத்தில் உள்ள சமுதாய நல்லிணக்க சுடுகாட்டுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அப்போது அகோரி மணிகண்டன், தன் சிஷ்ய அகோரிகளுடன் உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு மயானத்தில் கூடியிருந்தனர். மயானத்தில் வெங்கடேஷின் குடும்பத்தினர் செய்ய வேண்டிய இறுதிச் சடங்கை முடித்த பிறகு, அகோரி மணிகண்டன், வெங்கடேஷின் சடலத்தின்மீது அமர்ந்து மந்திரங்கள் சொல்லி ஆன்ம சாந்தி பூஜை செய்ததாகச் சொல்கிறார்கள். அதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

ராத்திரி ரவுண்ட் அப் - திருச்சி: நள்ளிரவு... மயானத்தில் பெண்கள் ரகசிய பூஜை!

அப்போது சக அகோரிகள் டம்ரா மேளம் அடித்தும் வினோத சங்கு ஊதி ஒலி எழுப்பியும் பூஜையில் ஈடுபட்டனர். இறந்த வெங்கடேஷ் ஏற்கெனவே அகோரி மணிகண்டனிடம் சிஷ்யராக இருந்திருக்கிறார் என்கின்றனர். இதன் காரணமாகவே குடும்பத்தினரின் அனுமதியோடு ஆன்ம சாந்தி பூஜை நடைபெற்றதாகச் சொல்லப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யார் இந்த அகோரி மணிகண்டன் என்று போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம்.” திருச்சி, மேலகல்கண்டார்கோட்டையைச் சேர்ந்தவர்கள் ராஜகோபால்-மேரி. இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் மகன்தான் குருமணிகண்டன். இவர், ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர்.

அகோரிகள்
அகோரிகள்

ஆன்மிகத்தின் மீதான அதீத ஈடுபாட்டால் சதுரகிரிமலையில் உள்ள 'பாலுசாமி' என்பவரின் மூலம், சில மந்திரங்களைக் கற்றுக்கொண்டு, 15 வயதிலேயே காசிக்குச் சென்று அகோரியாக மாறியிருப்பதாக அவரே சோஷியல் மீடியாக்களில் சொல்லியிருக்கிறார். இவர் மூன்று மாதங்களுக்கு முன்புகூட அவரது அக்கா மகனுக்கும் மாந்திரீகம் வகுப்பு சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளிவந்தன.

மணிகண்டன்
மணிகண்டன்

அதேபோல், கடந்த 2018-ம் ஆண்டு அவரது தாயார் உயிரிழந்தபோது அவரது ஆன்மா சாந்தி அடைய அவரது உடல் மீது அமர்ந்து மந்திரம் செய்தார். அதன் பிறகு போலீஸார் அதனை தடுத்தபின், அவரது தயாரின் அடக்கம் செய்யப்பட்டது. இவர் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால் போலீஸார் அவரைக் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். யாராவது ஒருவர் இவர்மீது புகார் கொடுத்தால் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு