Published:Updated:

சென்னை: பைனான்ஸியரை சாலையில் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்த கும்பல் - பட்டப்பகலில் பயங்கரம்

வெட்டிப் படுகொலை

சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவரை வழிமறித்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளது.

சென்னை: பைனான்ஸியரை சாலையில் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்த கும்பல் - பட்டப்பகலில் பயங்கரம்

சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவரை வழிமறித்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளது.

Published:Updated:
வெட்டிப் படுகொலை

சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் நேற்று மதியம் சென்னை அமைந்தகரை பகுதியில் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த சிலர் ஆறுமுத்தை வழிமறித்தனர். அந்த மர்மநபர்கள் மறைத்துவைத்திருந்த அரிவால் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து பைக்கில் தப்பித்து ஓடினர்.

ஆறுமுகம்
ஆறுமுகம்

இந்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஆறுமுகத்தை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அவரின் தலையில் பலமாக வெட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் உயிரிழந்தார். உயிரிழந்த ஆறுமுகத்தின் மீது, ஆயுத தடை சட்டம் உள்ளிட்ட ஐந்து வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மர்ம நபர்கள் ஆறுமுகத்தைக் கொலை செய்யும் காட்சிகளை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்திருந்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து, அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி போலீஸார் ஆய்வு நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஆறுமுகம் பைனான்ஸ் தொழில் நடத்திவருகிறார். நேற்று அவரின் நண்பருடன் பைக்கில் வரும்போது சிலர் அவரை துரத்தி வந்துள்ளனர்.

வெட்டிப் படுகொலை
வெட்டிப் படுகொலை

துரத்தி வந்தவர்கள், ஆறுமுகத்தை நாடு ரோட்டில் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பித்துச் சென்றதாகத் தெரியவருகிறது. மேலும், முன்பு ஆறுமுகம் பிரபல ரெளடி தட்சிணாமூர்த்தியின் கூட்டாளியாக இருந்துள்ளார். அவரிடம் விலகி சமீபத்தில் தான் காக்காத்தோப்பு பாலாஜியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளார். இதனால் ஏற்பட்ட பகையால் நடந்தக் கொலையா அல்லது தொழில் போட்டியில் ஏற்பட்ட கொலையா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் ஒருவரைத் துடிதுடிக்க வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism