Published:Updated:

சிறையிலிருந்து வெளியே வந்த ரெளடி... ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்த கும்பல் - சென்னையில் பயங்கரம்

ரெளடி வெட்டிப் படுகொலை

சென்னையில் சிறையிலிருந்து வெளியே வந்த ரெளடியை அடையாளம் தெரியாத மர்மக் கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளது.

சிறையிலிருந்து வெளியே வந்த ரெளடி... ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்த கும்பல் - சென்னையில் பயங்கரம்

சென்னையில் சிறையிலிருந்து வெளியே வந்த ரெளடியை அடையாளம் தெரியாத மர்மக் கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளது.

Published:Updated:
ரெளடி வெட்டிப் படுகொலை

சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான ஜீவன் குமார். இவர்மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு, மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு ஒருவரை வெட்டிய வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருந்த ஜீவன் குமார் சமீபத்தில்தான் வெளியே வந்திருக்கிறார்.

ஜீவன் குமார்
ஜீவன் குமார்

நேற்று இரவு ஒன்பது மணியளவில், புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தியாகி பெருமாள் சாலையில் ஜீவன் குமார் நடந்து சென்றிருக்கிறார். அப்போது அங்கு வந்த ஐந்து பேர்கொண்ட அடையாளம் தெரியாத மர்மக் கும்பல் ஒன்று ஜீவன் குமாரை, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்க முயன்றிருக்கிறது. இதனால், செய்வதறியாது அவர்களிடமிருந்து தப்பித்து ஓட முயன்றிருக்கிறார் ஜீவன் குமார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தப்பித்துச் சென்றவரை அந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளது. பலத்த காயமடைந்த ஜீவன் குமார் ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நிலையில் அங்கேயே விழுந்து கிடந்திருக்கிறார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர், ஜீவன் குமாரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

கொலை
கொலை

ஜீவன் குமாரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கிறது என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துவருகின்றனர். மேலும், தப்பித்துச் சென்ற ரமேஷ், நரேஷ், விக்கி உள்ளிட்ட ஐந்து பேர்கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism