Published:Updated:

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்குக் கூடுதல் சலுகை; சேலம் போலீஸார் சஸ்பெண்ட்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களுக்குச் சிறப்புச் சலுகை வழங்கிய சேலம் போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

நாட்டையே அதிரவைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தற்போதுவரை ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், மணிவண்ணன், வசந்த்குமார், சதீஷ், பாபு, ஹெரோன் பால், அருளானந்தம், அருண்குமார் ஆகிய ஒன்பது பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு
கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல்... 4 நாள்களில் விசாரணை! - வேகமெடுக்கும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு

சி.பி.ஐ தாக்கல் செய்திருந்த குற்றப் பத்திரிகையின் நகல் கடந்த முறை ஆஜரானபோதே அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதில் விடுபட்ட நகல்கள், நேற்று ஆஜரானபோது வழங்கப்பட்டது.

நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற 28-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். இதையடுத்து, அந்த ஒன்பது பேரும் மீண்டும் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் சென்ற காவல்துறை வாகனம், (TN 30 G 0453) கோவை சித்ரா விமான நிலையம் அருகே திடீரென நிறுத்தப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு

அங்கு கிட்டத்தட்ட எட்டு சொகுசு கார்களில் (எல்லாமே பொள்ளாச்சி பதிவு எண் கொண்ட வாகனங்கள்) அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் காத்திருந்தனர். காவல்துறை வாகனம் அங்கு சென்றதும், கைதுசெய்யப்பட்டவர்களிடம் உறவினர்கள் உரையாடினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாக கருதப்படும், சபரிராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன், வசந்த்குமார், சதீஷ் ஆகிய ஐந்து பேர் அந்த வாகனத்தில் இருந்தனர். உறவினர்களிடம் அவர்கள் பேசிய பின்னர், அந்த வாகனம் சேலம் மத்திய சிறைக்கு சென்றது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் உறவினர்களைச் சந்திக்க வேண்டுமென்றால், முறையாக, நீதிமன்றத்தின் முன்அனுமதியைப் பெற வேண்டும்.

கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல்... 4 நாள்களில் விசாரணை! - வேகமெடுக்கும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு
கைது செய்யப்பட்டவர்களுடன் உறவினர்கள்
கைது செய்யப்பட்டவர்களுடன் உறவினர்கள்

நீதிமன்றம் அனுமதி கொடுத்தாலும், நீதிமன்ற வளாகத்தில்தான் சந்திக்க முடியும். நேற்று நீதிமன்ற வளாகத்தில் வைத்தும் உறவினர்கள் சந்தித்திருக்கின்றனர்.

“நீதிமன்ற வளாகத்தைத் தவிர வெளியிடங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சந்திக்க அனுமதி இல்லை. வாகனத்தை சாப்பிட நிறுத்தினால்கூட, யாரையும் சந்திப்பதற்கு அனுமதி கொடுக்கக் கூடாது. இது பல்வேறு சட்டம், ஒழுங்கு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்” என்று கடும் எதிர்ப்பு எழுந்தது.

கைது செய்யப்பட்டவர்களுடன் உறவினர்கள்
கைது செய்யப்பட்டவர்களுடன் உறவினர்கள்

இதையடுத்து, கைதுசெய்யப்பட்டவர்களுக்குச் சிறப்பு சலுகை வழங்கிய சேலம் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட ஏழு போலீஸாரை சஸ்பெண்ட் செய்து சேலம் போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா உத்தரவிட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு