Published:Updated:

விழாவுக்கு அழைக்காத உறவினர் கத்தியால் குத்திக் கொலை - தருமபுரியில் நடந்த பயங்கரம்

க்ரைம் - கொலை

தருமபுரியில் விழாவுக்கு அழைக்காத ஆத்திரத்தில் உறவினர் ஒருவரைக் கத்தியால் கொலைசெய்த சம்பவம் நடந்திருக்கிறது.

விழாவுக்கு அழைக்காத உறவினர் கத்தியால் குத்திக் கொலை - தருமபுரியில் நடந்த பயங்கரம்

தருமபுரியில் விழாவுக்கு அழைக்காத ஆத்திரத்தில் உறவினர் ஒருவரைக் கத்தியால் கொலைசெய்த சம்பவம் நடந்திருக்கிறது.

Published:Updated:
க்ரைம் - கொலை

தருமபுரி மாவட்டம், பொம்மிடி பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன். இவர் அந்தப் பகுதியில் ஃபேன்சி ஸ்டோர் நடத்திவருகிறார். இவருக்கு 13 வயதில் ஒரு மகளும், 11 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இவரின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. ஈஸ்வரன் என்பவர் முனியப்பனின் உறவினர். ஈஸ்வரனும் அதே பகுதியைச் சேர்ந்தவர். இந்த இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது.

கொலை
கொலை

முனியப்பன் தன் மகளுக்குக் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மஞ்சள் நீராட்டு விழா நடத்தியிருக்கிறார். இந்த விழாவுக்கு முனியப்பன் ஈஸ்வரனை அழைக்கவில்லை. தன்னை அழைக்காததால் ஈஸ்வரன் கடும் கோபத்தில் இருந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர்கள் வசிக்கும் பகுதியிலுள்ள கோயிலில் திருவிழா நடைபெற்றது. அந்தத் திருவிழாவுக்கு வந்திருந்த முனியப்பனுக்கும், ஈஸ்வரனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த தகராறு ஒரு கட்டத்தில் சண்டையாக மாறியது. அப்போது ஈஸ்வரன் முனியப்பனைக் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டார். படுகாயமடைந்த முனியப்பன் ரத்தவெள்ளத்தில் அங்கேயே விழுந்திருக்கிறார். இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் அவரை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

கைது
கைது

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இருந்துவிட்டதாகத் தெரிவித்தனர். சம்பவமறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து, ஈஸ்வரனைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள். விழாவுக்கு அழைக்காத ஆத்திரத்தில் உறவினர் ஒருவர், தன் உறவினரையே கொலைசெய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.