Published:Updated:

திருவள்ளூர்: மாயமான சிறுமி ஏரியில் சடலமாக மீட்பு; காதல் விவகாரத்தில் கொன்று வீசிய இளைஞர்!

திருவள்ளூர் சிறுமி கொலை

சிறுமி பிரவீனிடம் தொடர்ந்து தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அவர், சிறுமியைக் கொலைசெய்ய முடிவுசெய்திருக்கிறார்.

திருவள்ளூர்: மாயமான சிறுமி ஏரியில் சடலமாக மீட்பு; காதல் விவகாரத்தில் கொன்று வீசிய இளைஞர்!

சிறுமி பிரவீனிடம் தொடர்ந்து தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அவர், சிறுமியைக் கொலைசெய்ய முடிவுசெய்திருக்கிறார்.

Published:Updated:
திருவள்ளூர் சிறுமி கொலை

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள பிச்சாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் திலகா. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தன் மகளுடன் நெல்வாய் கிராமத்தில் தனியாக வாழ்ந்துவருகிறார். இவரின் மகள் அங்குள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவந்தார். கடந்த 10-ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சிறுமி கொலை
சிறுமி கொலை

இந்நிலையில் கடந்த 23-ம் தேதி கொள்ளனூர் ஏரிக்கரையில் சிறுமியின் சடலம் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. தகவலறிந்த பாதிரிவேடு பகுதி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதற்கட்டமாக, காணாமல்போன சிறுமிதான் இவர் என்பது தெரியவந்தது. சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததால் கொலைசெய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்தச் சிறுமி அருகிலுள்ள மூக்கரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞரைக் காதலித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த பிரவீனைப் பிடித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. சிறுமி பள்ளிக்குச் செல்லும்போது இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டிருக்கிறது. சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறிப் பலமுறை நெருக்கமாக இருந்திருக்கிறார். ஒருகட்டத்தில் சிறுமி பிரவீனிடம் தொடர்ந்து தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டிருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த அவர், சிறுமியைக் கொலைசெய்ய முடிவு செய்திருக்கிறார்.

சிறுமி கொலை - கைது
சிறுமி கொலை - கைது

இதற்காக அதே பகுதியைச் சேர்ந்த 17 சிறுவனைக் கூட்டுச் சேர்த்திருக்கிறார். பிரவீன் சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி, கடந்த 10-ம் தேதி அழைத்துச் சென்றிருக்கிறார். பிரவீன் சிறுமியை அழைத்துக்கொண்டு கடந்த 22-ம் தேதிவரை பல இடங்களுக்கு ஒன்றாகச் சென்று தனிமையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சம்பவ தினத்தன்று பிரவீனும், அவர் நண்பரும் சேர்ந்து சிறுமியைக் கட்டையால் அடித்து, கழுத்தை நெரித்துக் கொலைசெய்து, பின்னர் உடலை ஏரியில் வீசிச் சென்றது தெரியவந்தது. இருவரும் கைதுசெய்யப்பட்ட நிலையில், பிரவீனை சிறையில் அடைத்துவிட்டு, மற்றொரு சிறுவனைச் செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியிருக்கின்றனர். சிறுமி கொலைசெய்யப்பட்ட விவகாரம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.