Published:Updated:

ஆருத்ரா மோசடி: தாய் தற்கொலை செய்துகொண்ட நிலையில் மகனும் தற்கொலை - காஞ்சியில் நடந்த சோகம்

தற்கொலை

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆரூத்ரா கோல்டு நிறுவன முகவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

ஆருத்ரா மோசடி: தாய் தற்கொலை செய்துகொண்ட நிலையில் மகனும் தற்கொலை - காஞ்சியில் நடந்த சோகம்

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆரூத்ரா கோல்டு நிறுவன முகவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

Published:Updated:
தற்கொலை

சென்னை அமைந்தகரை பகுதியில் செயல்படும் ஆரூத்ரா கோல்டு நிறுவனத்துக்கு, தமிழ்நாடு முழுவதிலும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கிளைகள் உள்ளன. சமீபத்தில் இந்த நிறுவனம் நிதி மோசடியில் ஈடுபட்டு முதலீட்டாளர்களுக்குப் பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாகப் புகார் எழுந்தது. இந்த மோசடி தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

கோவிந்தவாடி
கோவிந்தவாடி

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயபாஸ்கர். இவர் ஆரூத்ரா கோல்டு நிதி நிறுவனத்தின் முகவராகச் செயல்பட்டுவந்தார். இவரை நம்பி அந்தப் பகுதியில் பலரும் லட்சக்கணக்கில் ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தில் நிதி முதலீடு செய்ததாகச் சொல்லப்படுகிறது. பணம் செலுத்தியவர்கள், விஜயபாஸ்கர் வீட்டுக்கு வந்து கொடுத்த பணத்தைத் திருப்பித் தரும்படி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவருக்குத் தொடர்ந்து பலரிடமிருந்து தொடர் அழுத்தம் வந்ததால் விஜயபாஸ்கரும், அவரின் தாயாரும் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில் கடந்த 9-ம் தேதி அவரின் தாயார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சமீபத்தில்தான் அவருக்கு 16-ம் நாள் காரியம் நடைபெற்றது. பணம் கொடுத்தவர்களின் கேள்விகளுக்கும், மிரட்டல்களுக்கும் பதில் சொல்ல முடியாமல் இருந்த விஜயபாஸ்கர் நேற்று (26.08.2022) மதியம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் விஜயபாஸ்கரின் உடலைக் கைப்பற்றிய போலீஸார், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். விஜயபாஸ்கருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வரும் 1-ம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. திருமணத்துக்கு இன்னும் ஒருசில தினங்களே இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.