Published:Updated:

`மகள் வெளியிட்ட வாட்ஸ் அப் வீடியோ!' - சுபாஷ் பண்ணையார் மீது 2 பிரிவுகளில் வழக்கு

சுபாஷ் பண்ணையார்
சுபாஷ் பண்ணையார்

``எங்க அப்பா எங்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்” என அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவையின் தலைவரான சுபாஷ் பண்ணையாரின் மகள் பேசி வெளியிட்ட வீடியோவை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் என்ற சுபாஷ். சுபாஷ் பண்ணையார் என அழைக்கப்படும் இவர், மறைந்த வெங்கடேஷ் பண்ணையாரின் சகோதரர் ஆவார். அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவையின் தலைவராகவும், பனங்காட்டுப்படை மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளராகவும் உள்ளார்.

சுபாஷ் பண்ணையார்
சுபாஷ் பண்ணையார்

இவரது மனைவி ஜெயலிங்க தங்கம், தன் குழந்தைகளுடன் மூலக்கரையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு சுபாஷ் பண்ணையாரின் மகள் காவியா பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில், ``என் பேரு காவியா. நான் மூலக்கரை சுபாஷ் பண்ணையாரின் மகள். எங்க அப்பா இன்னொருவரின் மனைவியுடன் கடந்த 7 வருஷமா சேர்ந்து வாழ்கிறார். இந்த நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் இருக்கும் போட்டோவும், தேவையில்லாத போன்கால்களும் எங்களுக்குத் தொடர்ந்து வருது. இது சம்பந்தமா அப்பாவிடம் கேட்டதற்கு என்னையும், எங்க அம்மா, தம்பியையும் கொன்னுடுவேன்'னு மிரட்டுகிறார்.

ஆறுமுகநேரி காவல் நிலையம்
ஆறுமுகநேரி காவல் நிலையம்

எங்களை எங்க அப்பாவே கொன்றுவிட்டு, அவரது எதிரிகள் மீது பழியைப் போட்டுவிடுவார். என் அப்பாவின் உண்மையான குணத்தைத் தெரியப்படுத்தணும்னுதான் இந்த வீடியோ பதிவு. எங்களோட நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டு போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பேசியிருந்தார்.

இந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு ஆறுமுகநேரி போலீஸார் சுபாஷ் பண்ணையார் மீது 506(ii) மற்றும் 507 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், சுபாஷின் மனைவி ஜெயலிங்க தங்கம், ``எனது செல்போன் எண்ணிற்கு சில நாள்களுக்கு முன்பு 3 செல்போன் எண்களிலிருந்து மர்ம போன் கால் வந்தது. அதில், என்னை அவதூறாகப் பேசியதுடன், அவரது நடவடிக்கைகளைக் கண்காணித்துக் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்கள்” என போன் கால்கள் குறித்து ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சுபாஷ் பண்ணையார்
சுபாஷ் பண்ணையார்

அதன் அடிப்படையில், 501(1), 509, 354(டி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுபாஷ் பண்ணையாரின் மகள் வெளியிட்ட வீடியோ தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு