Published:Updated:

விருதுநகர்: மருத்துவமனைக்குள் புகுந்து நர்ஸைக் கடித்துக் குதறிய நிர்வாண இளைஞர்- நள்ளிரவில் அதிர்ச்சி

விருதுநகர்

செவிலியர் முகத்தை அந்த இளைஞர் கடித்துக் குதறியிருக்கிறார். இதனால் அலறித்துடித்த செவிலியரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.

விருதுநகர்: மருத்துவமனைக்குள் புகுந்து நர்ஸைக் கடித்துக் குதறிய நிர்வாண இளைஞர்- நள்ளிரவில் அதிர்ச்சி

செவிலியர் முகத்தை அந்த இளைஞர் கடித்துக் குதறியிருக்கிறார். இதனால் அலறித்துடித்த செவிலியரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.

Published:Updated:
விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கக்கூடிய வசதியுடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டுவருகிறது. இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்று மருத்துவர்கள் ஐந்து செவிலியர்கள், நான்கு பணியாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாதுகாவலர்கள் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு, ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் புகுந்த இளைஞர் ஒருவர் அங்கு மருந்தகத்தில் உள்ள மருந்து மாத்திரைகள் அனைத்தையும் கீழே தள்ளிவிட்டிருக்கிறார். தொடர்ந்து, ஆரம்ப சுகாதார நிலைய வாசலில் தனது உடைகள் அனைத்தையும் கழற்றி எறிந்துவிட்டு அந்த இளைஞர் அங்கேயே நிர்வாணமாகச் சுற்றிவந்திருக்கிறார். சத்தம் கேட்டு தங்கும் விடுதியிலிருந்து அங்கு வந்த செவிலியர் மீது, நிர்வாண இளைஞர் பாய்ந்து அவரை பலவந்தப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

இந்தப் போராட்டத்தில், செவிலியர் முகத்தை அந்த இளைஞர் கடித்துக் குதறியிருக்கிறார். இதனால் அலறித் துடித்த செவிலியரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். இதைப் பார்த்ததும், செவிலியரின் உடைகளை எடுத்துக்கொண்டு விடுதிக்குள் ஓட்டம்பிடித்திருக்கிறார் அந்த இளைஞர். தொடர்ந்து ஆட்கள் வருவதற்குள் செவிலியரின் உடையை அணிந்துகொண்டு ஒன்றும் நடக்காததுபோல் அங்கேயே அமர்ந்திருக்கிறார் அவர்.

விருதுநகர் - காவல் அலுவலகம்
விருதுநகர் - காவல் அலுவலகம்

ஆட்கள் வந்து சுற்றிவளைத்ததும், சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து விரைந்து வந்த நகர் காவல் நிலைய போலீஸார், அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இளைஞர் பாளையம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, மணிகண்டன் மீது வழக்கு பதிவுசெய்த போலீஸார் அவரைக் கைதுசெய்து தொடர் விசாரணை நடத்திவருகின்றனர். காயமடைந்த செவிலியர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கோபாலபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவில் புகுந்து செவிலியரை நிர்வாண இளைஞர் கடித்துக் குதறிய சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.