Published:Updated:

போலீஸைப் பார்த்ததும் ஓட்டம்; பள்ளி மாணவர்களுக்கு போதை தரக்கூடிய மாத்திரைகள் விற்றவர் கைது!

போதை மாத்திரைகள் | கைது

மயக்கநிலையில் வைத்திருக்கும் போதை தரக்கூடிய மாத்திரைகளை ஆன்லைனில் வாங்கி பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்தவரை அருப்புக்கோட்டை போலீஸார் கைதுசெய்தனர்.

போலீஸைப் பார்த்ததும் ஓட்டம்; பள்ளி மாணவர்களுக்கு போதை தரக்கூடிய மாத்திரைகள் விற்றவர் கைது!

மயக்கநிலையில் வைத்திருக்கும் போதை தரக்கூடிய மாத்திரைகளை ஆன்லைனில் வாங்கி பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்தவரை அருப்புக்கோட்டை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
போதை மாத்திரைகள் | கைது

அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீஸார் சொக்கலிங்கபுரம் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியிலுள்ள பள்ளி அருகே சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் போலீஸைக் கண்டதும் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். இதையடுத்து அந்த இளைஞரை மடக்கிப்பிடித்து போலீஸ் விசாரித்ததில் பிடிபட்ட நபர் மதுரை சோழவந்தானைச் சேர்ந்த தீபக்ராஜ் (25) என்பது தெரியவந்தது. சில மாதங்களுக்கு முன்னதாக அருப்புக்கோட்டைக்கு வந்த அவர், நெசவாளர் காலனியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கிறார்.

தீபக்ராஜ்
தீபக்ராஜ்

தீபக்ராஜுக்கு வேலை எதுவும் கிடைக்காததால், எந்நேரமும் மயக்கநிலையிலேயே வைத்திருக்கும் மாத்திரைகளை சட்டவிரோதமாக பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்து பிழைப்பு நடத்திவந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரைக் கைதுசெய்த போலீஸார், தீபக்ராஜிடம் தொடர் விசாரணை நடத்தினர். அதில், அந்த மாத்திரைகளை அவர் ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து வாங்கியிருப்பது தெரியவந்தது. பொதுவாக, மன அழுத்த நோய்க்காகப் பரிந்துரைக்கப்படும் அந்த மாத்திரைகளைச் சட்டவிரோதமாக ஆன்லைன் மூலமாக வாங்கி, பள்ளி மாணவர்களை மயக்கநிலை போன்ற போதைக்கு அடிமையாக்கும் எண்ணத்தில் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தீபக்ராஜிடமிருந்த 104 மாத்திரைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுபோல, விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரைகள் மற்றும் போதை வஸ்துக்கள் விற்பனையில் வேறு யாரேனும் ஈடுபடுகின்றனரா எனவும் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு போதை தரக்கூடிய மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.