Published:Updated:

விருதுநகர்: வழக்கு விசாரணைக்காக வந்தவர்கள்... பெண்ணைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்!

குற்றவாளிகள்

அருப்புக்கோட்டை அருகே பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் 5 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதில் முன்னாள் ராணுவ வீரர் முக்கியக் குற்றவாளி எனத் தெரியவந்துள்ளது. இதுதவிர தலைமறைவான மேலும் 2 பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.

விருதுநகர்: வழக்கு விசாரணைக்காக வந்தவர்கள்... பெண்ணைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்!

அருப்புக்கோட்டை அருகே பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் 5 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதில் முன்னாள் ராணுவ வீரர் முக்கியக் குற்றவாளி எனத் தெரியவந்துள்ளது. இதுதவிர தலைமறைவான மேலும் 2 பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.

Published:Updated:
குற்றவாளிகள்

அருப்புக்கோட்டை அருகே வசிக்கும் 40 வயத பெண் ஒருவர் தன்னுடைய உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக விருதுநகருக்குச் சென்றுவிட்டு மீண்டும் பஸ்ஸில் ஊர் திரும்பியிருக்கிறார். இந்நிலையில், அவருக்கு நன்கு அறிமுகமான கரிசல்குளத்தைச் சேர்ந்த முத்துச்செல்வம் என்பவர், அந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அப்போது பேசியவர், தானே காரில் கூட்டிச் சென்று இறக்கிவிடுவதாகக் கூறியிருக்கிறார். இதையடுத்து பாலவநத்தம் அருகே பஸ்ஸிலிருந்து இறங்கிய பெண், முத்துச்செல்வத்துடன் காரில் புறப்பட்டிருக்கிறார். அவர்கள் அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம்-கோபாலபுரம் சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, முத்துச்செல்வத்தைப் பின்தொடர்ந்து பைக் மற்றும் காரில் வந்த ஏழு பேர்கொண்ட கும்பல் அவரைத் தாக்கிவிட்டு அந்தப் பெண்ணை மறைவான இடத்துக்குக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது. மேலும், அந்தப் பெண் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகள், பணம், செல்போன் உள்ளிட்டவற்றையும் பறித்துக்கொண்டு அவரை அருப்புக்கோட்டை தாலுகாவில் இறக்கிவிட்டுவிட்டுத் தப்பித்துச் சென்றுள்ளனர்.

காவல் நிலையம்
காவல் நிலையம்

இந்த நிலையில், சாலையோரம் காயமடைந்து கிடந்த முத்துச்செல்வத்தை மீட்ட அக்கம் பக்கத்தினர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அவரைச் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதேவேளையில் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் 341, 354b, 366, 376d, 397, 506ii ஆகிய பிரிவுகளின் கீழ் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் ராமானுஜபுரம் பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியான அடையாளங்களுடன் வந்த கார் மற்றும் பைக்கில் வந்தவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்ததில் அவர்கள்தான் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் எனத் தெரியவந்தது. இதையடுத்து, கார் மற்றும் பைக்கைப் பறிமுதல் செய்த போலீஸார் அவர்களை தாலுகா காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். போலீஸாரின் விசாரணையில் அவர்கள் கோவிலாங்குளத்தைச் சேர்ந்த சீனிவாசன் (42), பேரையூர் அருகே வெங்கடாசலபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் (23), ராம்குமார் (20), அழகுராஜ் (19), அல்லம்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதில் சீனிவாசன் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது
கைது

சீனிவாசன், அவரின் கூட்டாளிகளான வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன், அவருடைய தம்பி விஜய் ஆகிய மூன்று பேரும் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்துள்ளனர். இவர்களுடன் ஜெயக்குமார், ராம்குமார், அழகுராஜ், 17 வயது சிறுவன் ஆகியோரும் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கோபாலபுரம் சாலை வழியே வரும்போது, அங்கு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்த முத்துச்செல்வத்தைத் தாக்கிவிட்டு, பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சீனிவாசன், ஜெயக்குமார், ராம்குமார், அழகுராஜ் ஆகிய 4 பேரும் கைதுசெய்யப்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று சிறையில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவனை சிறுவர் காப்பகத்தில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் பிரபாகரன், அவரின் தம்பி விஜய்யை போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர். அருப்புக்கோட்டை அருகே பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.