Published:Updated:

விழுப்புரம்: குடும்பத் தகராறில் தற்கொலை செய்துகொண்ட தந்தை; சோகத்தில் மகனும் தற்கொலை - என்ன நடந்தது?

தற்கொலை செய்துகொண்ட அர்ஜுனன், உதயகுமார்.

தந்தை தற்கொலை செய்துகொண்ட சோகம் தாளாமல், மகனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரம்: குடும்பத் தகராறில் தற்கொலை செய்துகொண்ட தந்தை; சோகத்தில் மகனும் தற்கொலை - என்ன நடந்தது?

தந்தை தற்கொலை செய்துகொண்ட சோகம் தாளாமல், மகனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
தற்கொலை செய்துகொண்ட அர்ஜுனன், உதயகுமார்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகேயுள்ள மேல்வாலை கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன். இவருக்குத் திருமணமாகி ஒரு மகள், இரண்டு மகன்கள் இருக்கின்றனர். விவசாயியான இவர், நேற்று இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்குச் சென்றாராம். இதை இவரின் மனைவி சரசு கண்டித்த நிலையில், கணவன் - மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மனமுடைந்த அர்ஜுனன், நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் தூக்கிட்டு, தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், அந்த வீடே துக்கத்தில் ஆழ்ந்துபோயிருந்தது. தந்தையுடன் விவசாயப் பணியை மேற்கொண்டு வந்த கடைசி மகன் உதயகுமார், தந்தை உயிரிழந்த சோகம் தாளாமல் `நானும் உன்னுடனேயே வந்துவிடுகிறேன்’ எனக் கூறி, கதறி அழுதபடியே வீட்டின் பின்புறமுள்ள வயல்வெளிப் பகுதிக்குச் சென்றிருக்கிறார்.

தற்கொலை
தற்கொலை

இதையறிந்த அவரின் உறவினர்கள், உதயகுமாரை தேடிச் சென்றிருக்கின்றனர். அப்போது வயலிலுள்ள மரம் ஒன்றில் அதிகாலை 3 மணியளவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் காணப்பட்டிருக்கிறார் உதயகுமார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உயிரிழந்த உதயகுமாரின் சடலத்தை மீட்டு வீட்டுக்குக் கொண்டு வந்தனர். அர்ஜுனன் உயிரிழந்த துக்கத்தில் ஆழ்ந்திருந்த குடும்பம், உதயகுமார் உயிரிழந்ததை அறிந்து மேலும் சோகத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இந்தச் சம்பவங்கள் குறித்து கேள்வியுற்ற கண்டாச்சிபுரம் காவல்துறையினர், அர்ஜுனன் மற்றும் உதயகுமாரின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும், 174-வது பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர். குடும்பத் தகராறில் தந்தை தற்கொலை செய்துகொண்ட சோகத்தைத் தாங்க முடியாமல், மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.