Published:Updated:

பாமக-வின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் தேவமணி படுகொலை! - பதற்றத்தைக் குறைக்க 144 தடை உத்தரவு

தேவமணி
News
தேவமணி

பதற்றம், கலவரத்தைத் தடுக்க திருநள்ளாறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.

காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணி, நேற்றிரவு (22.10.2021) சுமார் 10:20 மணிக்கு திருநள்ளாரில் அவரின் வீட்டின் அருகிலேயே படுகொலை செய்யப்பட்டார். இதனால் காரைக்கால் மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

தேவமணி
தேவமணி

தேவமணி, திருநள்ளாறு கடைவீதியிலுள்ள கட்சி அலுவலகத்திலிருந்து இரவு 10 மணிக்கு மேல் வீடு திரும்புவது வழக்கம். அந்த வகையில் நேற்று குமார் என்பவர் டூ வீலர் வாகனத்தை ஓட்ட, பின்னால் அமர்ந்து சென்றிருக்கிறார் தேவமணி. அப்போது மூன்று பைக்குகளில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், இவர்களை வழிமறித்து பின்பக்கமாக தேவமணியை வெட்ட தேவமணி கீழே விழுந்திருக்கிறார். கால் இடறி விழுந்தவரைச் சரமாரியாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். டூ வீலரை ஓட்டிவந்த குமார் கீழே விழுந்து எழுந்தபோது, அவரை அரிவாளால் மிரட்ட அவர் தப்பி ஓடியிருக்கிறார். இந்தப் படுகொலையைச் செய்துவிட்டு மூன்று பைக்குகளில் கொலையாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசும் விவரம் அறிந்த சிலர், `தனக்குச் சொந்தமான இடத்தை ஒருவருக்கு வாடகை இல்லாமல் கொடுத்திருக்கிறார் தேவமணி. அந்த இடத்தில் வீடுகட்டி, ஓட்டல் நடத்திவந்த அந்த நபர், கடந்த தேர்தலில் தேவமணியின் அரசியல் எதிரியான முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் பக்கம் சென்றுவிட, அந்த வருத்தத்தில் தேவமணி இடத்தைத் திருப்பிக் கேட்டிருக்கிறார்.

கொலை
கொலை
சித்திரிப்புப் படம்

அந்த நபரோ கொடுக்க மறுத்திருக்கிறாராம். இந்தப் பிரச்னையில் அந்த இடத்தில் இருவரும் பிரவேசிக்காமல் , காவல்துறையினர் தலையிட்டு சீல் வைத்து, கோர்ட் மூலம் தீர்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டார்கள்.

இது தவிர தேவமணி மது அருந்த மாட்டார். மது விற்பனைக்கு எதிரான கட்சிக் கொள்கையைக் கடைப்பிடித்து சட்டப் போராட்டம் நடத்தி சுமார் 50 -க்கும் மேற்பட்ட சாராயம் மற்றும் மதுபான கடைகளை மூட வைத்திருக்கிறார். இடப் பிரச்னை அல்லது மதுபான விற்பனையைத் தடுத்த பிரச்னை எதனால் இந்தக் கொலை நடந்தது என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்’ என்கிறார்கள். இதற்கிடையே கொலையாளியைக் கைதுசெய்தால்தான் தேவமணியின் உடலைப் பெற்றுக்கொள்வோம் என பா.ம.க-வினர் போராட்டம் நடத்திவருகிறார்கள். இதனால் பதற்றம், கலவரத்தைத் தடுக்க திருநள்ளாறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.