Published:Updated:

ராமநாதபுரம்: அரசு அதிகாரியைக் காட்டுக்குள் கடத்திச் சென்று வழிப்பறி- நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்

கைதுசெய்யப்பட்ட வழிப்பறிக் கொள்ளையர்கள்

ராமநாதபுரம் அருகே பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தில் வந்த அரசு அதிகாரியிடம் லிஃப்ட் கேட்டு காட்டுக்குள் கடத்திச் சென்று, தாக்கி பணத்தைப் பறித்திருக்கிற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ராமநாதபுரம்: அரசு அதிகாரியைக் காட்டுக்குள் கடத்திச் சென்று வழிப்பறி- நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்

ராமநாதபுரம் அருகே பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தில் வந்த அரசு அதிகாரியிடம் லிஃப்ட் கேட்டு காட்டுக்குள் கடத்திச் சென்று, தாக்கி பணத்தைப் பறித்திருக்கிற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கைதுசெய்யப்பட்ட வழிப்பறிக் கொள்ளையர்கள்

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் அதிகாரியாகப் பணிபுரியும் ஒருவர், கடந்த 14-ம் தேதி காலை இரு சக்கர வாகனத்தில் பேராவூருக்குச் சென்றுவிட்டு ஈ.சி.ஆர் சாலையில் வீட்டுக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பேக்கரி அருகே நடந்து சென்றுகொண்டிருந்த வாலிபர் ஒருவர் லிஃப்ட் கேட்டிருக்கிறார். இதையடுத்து, அவரை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் சென்ற நிலையில், லிஃப்ட் கேட்டு வந்த வாலிபர் கத்தியை எடுத்து அதிகாரி கழுத்தில் வைத்து, தான் சொல்லும் இடத்துக்குச் செல்லுமாறும், இல்லையென்றால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி புழுதிக்குளம் கண்மாய் பகுதிக்குக் கடத்திச் சென்றிருக்கிறார்.

அங்கு வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், அந்த அதிகாரியை கருவேலங்காட்டுப் பகுதிக்குள் இழுத்துச் சென்று துணிகளைக் களைந்து நிர்வாணமாக நிற்கவைத்து வீடியோ எடுத்ததோடு, கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து அவரிடம் இருந்த 20,000 ரூபாய் பணத்தைப் பறித்துக்கொண்டு, `இதுகுறித்து வெளியில் சொன்னால் நிர்வாண வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம். கொலைகூட செய்து விடுவோம்’ எனவும் மிரட்டி அனுப்பியிருக்கின்றனர்.

ராமநாதபுரம்: அரசு அதிகாரியைக் காட்டுக்குள் கடத்திச் சென்று வழிப்பறி- நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்

படுகாயங்களுடன் அங்கிருந்து தப்பிவந்த அரசு அதிகாரி, கேணிக்கரை காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி அங்கு கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக்கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டறிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பெருங்குளத்தைச் சேர்ந்த ஜெயபாலா, நாகாச்சியைச் சேர்ந்த முனீஸ்குமார், முனியசாமி, கலைச்செல்வன் ஆகிய நான்குபேரைக் கைதுசெய்திருக்கின்றனர். மேலும் மாரீஸ்வரன், பாலேந்திரன் ஆகிய இருவரைத் தேடிவருகின்றனர். கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கெனவே பல்வேறு வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டு கைதான குற்றவாளிகள் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

பட்டப் பகலில் இரு சக்கர வாகனத்தில் சென்ற அரசு அதிகாரியை வழிப்பறிக் கொள்ளையர்கள் கடத்திச் சென்று, தாக்கி பணத்தைப் பறித்துச் சென்ற சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.