Published:Updated:

சென்னை: மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை - உதவி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது!

பாலியல் தொல்லை ( சித்தரிப்புப் படம் )

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் உதவி தலைமை ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை: மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை - உதவி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் உதவி தலைமை ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Published:Updated:
பாலியல் தொல்லை ( சித்தரிப்புப் படம் )

சென்னையில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியொன்றில் உதவி தலைமை ஆசிரியராக ராஜா முத்தெழில்(49) என்பவர் வேலைப்பார்த்து வருகிறார். இவரின் வகுப்பில் பயிலும் சில மாணவிகளின் கையைப் பிடித்து போர்டில் எழுத வைப்பது உட்பட, மாணவிகள் விரும்பாத வகையில் பாடம் நடத்துவது போல பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள், தங்களுக்கு வகுப்பறையில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து தங்களின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து மாணவிகளின் பெற்றோர், போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி தலைமை ஆசிரியர் ராஜா முத்தொழில்மீது புகாரளித்தனர்.

கைது
கைது

அதன்பேரில் போலீஸார் பாதிக்கப்பட்ட மாணவிகள், குற்றம்சாட்டப்பட்ட ராஜா முத்தொழில் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆசிரியர் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்தது உறுதியானது. இதையடுத்து ஆசிரியர்மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவுசெய்து ராஜா முத்தொழிலைக் கைதுசெய்தனர்.