Published:Updated:

`கார்ல 52 லட்சம் ரூபாய் இருக்கு... கவனம்..!’ -பணத்துடன் எஸ்கேப் ஆன டிரைவர் சிக்கியது எப்படி?

``6 மாதங்களுக்கு முன் புதிய கார் ஒன்றை வாங்கினேன். அதனால் ஏற்பட்ட கடனை அடைக்கத்தான் ஏடிஎம் பணத்துடன் எஸ்கேப் ஆனேன்" என்று கார் டிரைவர் அன்புரோஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

டிரைவர் அன்புரோஸிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம்
டிரைவர் அன்புரோஸிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம்

சென்னை ஜாபர்கான்பேட்டை, அன்னை சத்யா நகர் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவர். கடந்த 19-ம் தேதி வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, `நான் தனியார் நிறுவனத்தில் ஏடிஎம்-களில் பணம் நிரப்பும் ஊழியராக வேலை பார்த்துவருகிறேன். என்னுடன் வினோத்குமார், காவலாளி பீர்முகமது அன்சாரி ஆகியோர் பணியாற்றுகின்றனர். கடந்த 19-ம் தேதி டிஎன் 07 சிஹெச் 3733 என்ற சில்வர் நிற சைலோ காரில் பிற்பகல் 2.30 மணியளவில் 87 லட்சம் ரூபாயுடன் ஏடிஎம்-களில் பணம் நிரப்பச் சென்றோம். காரை டிரைவர் அன்புரோஸ் என்பவர் ஓட்டினார்.

டிரைவர் அன்புரோஸிடமிருந்து பறிமுதல் செய்த பணம்
டிரைவர் அன்புரோஸிடமிருந்து பறிமுதல் செய்த பணம்

முதலில் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு வங்கியின் ஏடிஎம்-மில் 3 லட்சம் ரூபாயை நிரப்பிவிட்டு அடுத்து ராமானுஜம் ஐடி பார்க்கில் உள்ள 2 ஏடிஎம்-களில் 25 லட்சம் ரூபாயை நிரப்பினோம். பின்னர் மத்திய கைலாசில் உள்ள ஏடிஎம்-மில் 2 லட்சம் ரூபாயை நிரப்பினோம். பின்னர் மாலை 5 மணியளவில் வேளச்சேரி விஜயநகர் முதல் மெயின் தெருவில் உள்ள வங்கியின் ஏடிஎம்-மில் 5 லட்சம் ரூபாயை நிரப்ப நான், வினோத்குமார், காவலாளி பீர்முகமது அன்சாரி ஆகியோர் சென்றோம். காரில் டிரைவர் அன்புரோஸ் இருந்தார். அவரிடம், `மீதமுள்ள பணம் 52 லட்சம் ரூபாய் உள்ளதால் பாதுகாப்பாக இருங்கள்' என்று கூறிவிட்டுச் சென்றோம்.

ஏடிஎம்மில் பணத்தை நிரப்பிவிட்டு மாலை 5.45 மணியளவில் வெளியில் வந்தோம். அப்போது டிரைவர் அன்புரோஸ் மற்றும் காரைக் காணவில்லை. பணத்துடன் தப்பிய அவரைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்அடிப்படையில் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் தலைமையிலான போலீஸார் கார் டிரைவர் அன்புரோஸைத் தேடினர். சிசிடிவி கேமரா பதிவு மூலம் அநாதையாக நின்ற காரை போலீஸார் முதலில் கண்டுபிடித்தனர். பின்னர் அன்புரோஸ் மனைவியிடம் விசாரித்தனர். அப்போது அன்புரோஸ் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள தெற்கு மண்ணுக்கு முண்டான் கிராமத்தில் உள்ள மாமனார் வீட்டிலில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

டிரைவர் அன்புரோஸ்
டிரைவர் அன்புரோஸ்

அங்கு சென்ற தனிப்படை போலீஸார், அன்புரோஸை கைது செய்து அவரிடமிருந்து 52 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போலீஸாரிடம் அன்புரோஸ், ``நான் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்தமாக புதிய கார் ஒன்றை கடனுக்கு வாங்கினேன். அதனால் எனக்குக் கடன் சுமை அதிகமானது. கடனை திரும்பச் செலுத்தப் போதிய வருமானம் இல்லை.

`பணத்தைப் பார்த்ததும் மனம் மாறிவிட்டது!' -ரூ.52 லட்சம் ஏடிஎம் பணத்துடன் சிக்கிய சென்னை டிரைவர்

இந்தச் சமயத்தில் என்னுடைய காரில் ஏடிஎம்-களில் பணத்தை நிரப்ப லட்சக்கணக்கான பணத்துடன் 3 பேர் வந்தனர். அப்போது நான் பணத்தை திருட வேண்டும் என்று கருதவில்லை. 4 ஏடிஎம்-களில் பணத்தை நிரப்பிவிட்டு 5-வது ஏடிஎம்-மில் பணத்தை நிரப்ப காரில் இருந்த 3 பேரும் இறங்கிச் சென்றனர். நான் மட்டும் காரில் இருந்தேன். அப்போது ஒரு லாரி வந்ததால் அதற்கு வழிவிட காரை ஏடிஎம்மிலிருந்து சிறிது தூரம் தள்ளி நிறுத்தச் சென்றேன். அப்போது ஏடிஎம்மில் பணத்தை நிரப்பும் ஊழியரான வினோத், `காரில் 52 லட்சம் ரூபாய் பணம் இருக்கிறது. கவனம்' என்று கூறினார். உடனே என் மனம் மாறியது.

டிரைவர் அன்புரோஸ்
டிரைவர் அன்புரோஸ்
`பணத்தைப் பார்த்ததும் மனம் மாறிவிட்டது!' -ரூ.52 லட்சம் ஏடிஎம் பணத்துடன் சிக்கிய சென்னை டிரைவர்

இதையடுத்து, பணத்துடன் காரில் எஸ்கேப் ஆனேன். என்னுடைய செல்போனிலிருந்து உறவினர்களுக்கு போன் செய்து, `இது ஆபீஸ் பணம், அவசரமாக வெளியூர் செல்கிறேன். அதுவரை இந்தப் பணத்தை வைத்துக்கொள்ளுங்கள்' என்று கூறி ஒப்படைத்தேன். பின்னர் காரை ஆர்.கே.நகர் பகுதியில் நிறுத்திவிட்டு பஸ் மூலம் மன்னார்குடிக்குச் சென்றேன். ஆனால், போலீஸார் என்னைப் பின்தொடர்ந்து வந்து பிடித்துவிட்டனர். காரின் கடனை அடைத்து வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என ஆசைப்பட்ட நான், எல்லாத்தையும் இழந்துவிட்டேன்' எனக் கூறியுள்ளதாகப் போலீஸார் தெரிவிக்கின்றனர்.