Published:Updated:

ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற நகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்... பழநியில் நடந்தது என்ன?!

தாக்குதல்

நடைபாதையில் டீக்கடை நடத்திவந்த பிரபாகரன் என்பவர் நகராட்சி ஊழியர்களான லோகேஸ்வரன், அய்யனார் ஆகியோரைச் சரமாரியாகத் தாக்கினார். இதில் இருவருக்கும் சட்டை கிழிந்து உடலில் ரத்தக் காயங்கள் ஏற்பட்டன. 

ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற நகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்... பழநியில் நடந்தது என்ன?!

நடைபாதையில் டீக்கடை நடத்திவந்த பிரபாகரன் என்பவர் நகராட்சி ஊழியர்களான லோகேஸ்வரன், அய்யனார் ஆகியோரைச் சரமாரியாகத் தாக்கினார். இதில் இருவருக்கும் சட்டை கிழிந்து உடலில் ரத்தக் காயங்கள் ஏற்பட்டன. 

Published:Updated:
தாக்குதல்

திண்டுக்கல் மாவட்டம், பழநி நகராட்சிக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் 200 கடைகள் நகராட்சியால் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இங்கு கடை நடத்துவோர் பயணிகள் நடக்க முடியாத அளவுக்கு நடைபாதையை ஆக்கிரமித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

வாக்குவாதம்
வாக்குவாதம்

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதையை விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில், நகராட்சி ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நடைபாதையில் டீக்கடை நடத்திவந்த பிரபாகரன் என்பவர் நகராட்சி ஊழியர்களான லோகேஸ்வரன், அய்யனார் ஆகியோரைச் சரமாரியாகத் தாக்கினார். இதில் இருவருக்கும் சட்டை கிழிந்து, உடலில் ரத்தக் காயங்கள் ஏற்பட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பழநி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நகராட்சி ஊழியர்கள் தாக்கிவிட்டு தப்பி ஓடிய டீக்கடை உரிமையாளர் உள்ளிட்டோரை போலீஸார் தேடிவருகின்றனர். இதற்கிடையே கடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக நகராட்சி ஊழியர்களுக்கும், கடை நடத்துவோருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பழநி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பு கடைகள்
ஆக்கிரமிப்பு கடைகள்

இது குறித்து பழநி நகராட்சி ஆணையர் கமலாவிடம் பேசினோம். ``பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடுங்கள் எனப் பலமுறை கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தியிருந்தோம். ஆனால் கடைக்காரர்கள் யாரும் அதைக் கேட்பதாக இல்லை. இன்று நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றபோது தாக்கப்பட்டுள்ளனர். அந்த டீக்கடைக்காரர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடியில் முடிந்திருக்கிறது. மதுபோதை காரணமாக நடந்ததால் இதை பெரிதாக்க விரும்பாமல் போலீஸாரிடம் புகார் அளிக்கவில்லை. இனி பஸ் ஸ்டாண்ட் கடை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை போலீஸ் உதவியுடன் மேற்கொள்ளவிருக்கிறோம்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏற்கெனவே பழநி நகராட்சிக் கடைகள் ஏலம் விடுவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார்கள் உள்ளன. இந்நிலையில் நகராட்சிக்குச் சொந்தமான கட்டடத்தில் கடை நடத்துவோர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடைகள் நடத்திக்கொண்டு நகராட்சி ஊழியர்களையே தாக்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வாக்குவாதத்தில் ஊழியர்கள்
வாக்குவாதத்தில் ஊழியர்கள்

தமிழ்நாட்டின் முக்கியமான ஆன்மிகத் தலமான பழநி நகருக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கானோரும், திருவிழாக் காலங்களில் லட்சக்கணக்கானோரும் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் கடைகளை அமைத்து வியாபாரம் நடத்த நகராட்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism