Published:Updated:

`நாங்களும் போலீஸ்தான்...’ - ரோந்து சென்ற காவலர்களைத் தாக்கிய ஆயுதப்படை காவலர் உட்பட 4 பேர் கைது!

கைது

இளைஞர்களைப் பிடித்து வந்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், அருண்குமார் திருச்சி ஆயுதப்படைக் காவலராகப் பணியாற்றிவருவது தெரியவந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ-ஆகப் பணியாற்றிவரும் சந்திரன், காவலராகப் பணியாற்றும் கார்த்திக் இருவரும் வழக்கம்போல் இரவு ரோந்துப் பணிக்குச் சென்றிருக்கின்றனர். அப்போது, புத்தாம்பூர் என்ற பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார், பார்த்திபன், விஜய், மோகன்ராஜ் ஆகிய நான்கு இளைஞர்கள் பாலத்தில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ரோந்துக்குச் சென்ற போலீஸார், மது அருந்திக்கொண்டிருந்தவர்களை உடனே அந்த இடத்தைவிட்டு கிளம்புமாறு எச்சரித்திருக்கின்றனர். அப்போது, கிளம்ப மறுத்த அந்த இளைஞர்கள், சிலர், `நாங்களும் போலீஸ்தான்... போக முடியாது’ என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, எஸ்.எஸ்.ஐ சந்திரன். காவலர் கார்த்திக் இருவரையும் நான்கு பேரும் சேர்ந்து தாக்கியிருக்கின்றனர்.

`நாங்களும் போலீஸ்தான்...’ - ரோந்து சென்ற காவலர்களைத் தாக்கிய ஆயுதப்படை காவலர் உட்பட 4 பேர் கைது!

இது குறித்து பாதிக்கப்பட்ட போலீஸார் கொடுத்த புகாரின் பேரில், இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அருண்குமார் திருச்சி ஆயுதப்படைக் காவலராகப் பணியாற்றிவருவது தெரியவந்தது.

இதையடுத்து, அருண்குமார், அவருடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த பார்த்திபன், விஜய், மோகன்ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவுசெய்த வெள்ளனூர் போலீஸார் கைதுசெய்து விசாரணை நடந்திவருகின்றனர். புதுக்கோட்டையில் ரோந்துப் பணிக்குச் சென்ற காவலர்களை தாக்கிய வழக்கில், ஆயுதப்படை காவலருடன் சேர்த்து நான்கு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கும் சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.