Published:Updated:

சென்னையில் தனியார் டிவி சேனல் அலுவலகத்தில் தாக்குதல்! என்ன நடந்தது?

டிவி சேனல் தாக்குதல்
டிவி சேனல் தாக்குதல்

சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்தில் தாக்குதல் நடந்துள்ளது. என்ன நடந்தது அங்கே?

சென்னை ராயபுரத்தில் சத்தியம் தொலைக்காட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு ஆகஸ்ட் 03-ம் தேதி மாலை 7.15 மணியளவில் மர்மநபர் ஒருவர் குஜராத் பதிவெண் கொண்ட காரில் வந்திறங்கியுள்ளார். கையில் கிட்டார் பேக்குடன் அலுவலகத்திற்குள் சென்றுள்ளார். அலுவலக ஊழியர்கள் கேட்டபோது, வேலை நிமித்தமாக வந்துள்ளதாகக் கூறியாதல் அவரை உள்ளே செல்ல அனுமதித்துள்ளனர். வரவேற்பறையில் பேசிக்கொண்டிருந்த நபர் திடீரென தனது கிட்டார் பையில் மறைந்து வைத்திருந்த பெரிய வாள் மற்றும் கேடயத்தை எடுத்து அங்கிருந்த மேஜை, கண்ணாடி, டிவி, கணினி, கதவு என்று அனைத்தையும் உடைத்துச் சேதப்படுத்தினர்.

கைது செய்யப்பட்ட ராஜேஷ்குமார்
கைது செய்யப்பட்ட ராஜேஷ்குமார்

அங்கிருந்த ஊழியர்கள் யாரவது தடுக்க வந்தால் வெட்டிவிடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ராயபுரம் காவல்துறைக்குத் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவர் கையிலிருந்த வால், கேடயம் மற்றும் அவர் வந்த கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து அந்த நபரைக் கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். காவல்துறை விசாரித்ததில், அந்த நபர் குஜராத்தில் தொழில் செய்துவரும் கோவையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (31) என்பதும். இவர் கோவையில் அரசு மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்ற தர்மலிங்கத்தின் மகன் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது நடைபெற்ற தாக்குதலுக்குப் பல அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். சத்தியம் தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளர் விஜயகுமார் அளித்த புகாரில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணைக்குப் பின் காவல்துறை சார்பில், ``கைதுசெய்யப்பட்ட ராஜேஷ்குமார் கடந்த எட்டு மாதங்களாகக் குஜராத்தில் தனது சகோதரோடு தங்கியுள்ளார். தனக்குப் பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி இருப்பதாக அதீத கற்பனையுடன் இருந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் ராஜபாளையத்தில் வெள்ளம் ஏற்படவுள்ளதாகச் அந்தத் சேனலில் ஒளிபரப்பாகியுள்ளது" என்று கூறினார்.

திசையன்விளை: ‘நைட்டி அணிந்து 5  கடைகளில் திருடிய திருடன்' - பரபரப்பான சிசிடிவி காட்சிகள்!

மேலும், ``இந்த செய்தியைப் பார்த்தவர் வரதாவில் இருந்து ராஜபாளையம் சென்றுள்ளார். வெள்ளச் சேதம் ஏற்படாததினால் மீண்டும் அவர் வரதாவுக்கே சென்றுள்ளார். இதனால் தனக்கு 1.5 லட்சம் செலவானதாகவும் கூறியுள்ளார். தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும்போது மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு என்று சேனலில் செய்தி வெளியாகியுள்ளது. இதனால் மத்தியப் பிரதேசம் வழியாகக் கோவை சென்றடைய 50 ஆயிரம் ரூபாய் அதிகமாகச் செலவாகியுள்ளது. தனக்கும் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிர்வாகத்தினருக்கு கோபம் இருந்ததாகவும். அதனைத் தனிக்கவே இப்படிச் செய்ததாக" காவல்துறையினர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`ராஜேஷ்குமார் சில நாட்களுக்கு முன்னர் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அலுவலகத்திலிருந்த அரவிந்த் என்பவருடன் வாக்குவாதம் முற்றி, தன்னை `சைக்கோ' என்றுக்கூறி, முடிந்தால் சென்னை வந்து பார் என்று வாதிட்டுள்ளார். இதனால், காரில் சென்னை வந்தவர், தனியார் தொலைக்காட்சி அலுவலகத்திற்குச் சென்று வன்முறையில் ஈடுபட்டுள்ளார்" என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டதுள்ளது. இந்த வன்முறைச் சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. சம்பவம் நடைபெற்ற இடத்தை வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையாளர் நேரில் சென்று ஆய்வு செய்தார். கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். நீதிமன்றம் அவரை வரும் 18.08.2021 தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

வழக்கு பதிவு
வழக்கு பதிவு
Durairaj G

சம்பந்தப்பட்ட சேனலைச் சேர்ந்த அரவிந்த் இந்தத் தாக்குதல் குறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் தவறானது என்று தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு