Published:Updated:

`டியூஷன் ஆசிரியைக்கு கத்திக்குத்து'- 11ம் வகுப்பு மாணவன் மீது வழக்கு!

ஆசிரியை மெர்லின் ஷானி
ஆசிரியை மெர்லின் ஷானி

மாணவன் திடீரென துப்பட்டாவால் ஆசிரியை கழுத்தை இறுக்கி அவரிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை கூச்சலிட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஆலஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் மெர்லின் ஷானி (25). பி.எட். படித்து முடித்த இவர் தனது வீட்டில் மாணவ மாணவிகளுக்கு டியூஷன் வகுப்பு நடத்திவருகிறார். மெர்லின் ஷானியிடம் அதே பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் ஒருவரும் டியூஷன் படித்துவந்துள்ளார்.

சோகத்தில் ஆசிரியையின் உறவினர்கள்
சோகத்தில் ஆசிரியையின் உறவினர்கள்

அப்போது அந்த மாணவன் திடீரென துப்பட்டாவால் ஆசிரியை கழுத்தை இறுக்கி அவரிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை கூச்சலிட்டார். இதனால் பயந்த அந்த மாணவன் மறைத்து வைத்து கொண்டுவந்த கத்தியால் மெர்லின் ஷானியை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

ஆசிரியையின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஷானியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அடிவயிறு உள்ளிட்ட பல பகுதிகளில் கத்திக்குத்துடன் மயங்கிய நிலையில் ஆசிரியை கிடந்ததால் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆசிரியைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Crime
Crime

ஆசிரியையை கத்தியால் குத்திய மாணவன் தலைமறைவாகியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து கடையாலுமூடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டியூஷன் ஆசிரியையை மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு