Published:Updated:

கடனைத் திரும்ப செலுத்தாததால் பறிமுதல்: தடுக்க முயன்ற கர்ப்பிணி டிராக்டரில் அடிபட்டு பலி!

டிராக்டர் ( மாடல் படம் )

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடனை வசூலிக்க வந்தவர்கள் டிராக்டரை பறிமுதல் செய்ய முயன்றனர். அதைத் தடுக்க முயன்ற கர்ப்பிணிப் பெண் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்துள்ளனர்.

கடனைத் திரும்ப செலுத்தாததால் பறிமுதல்: தடுக்க முயன்ற கர்ப்பிணி டிராக்டரில் அடிபட்டு பலி!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடனை வசூலிக்க வந்தவர்கள் டிராக்டரை பறிமுதல் செய்ய முயன்றனர். அதைத் தடுக்க முயன்ற கர்ப்பிணிப் பெண் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்துள்ளனர்.

Published:Updated:
டிராக்டர் ( மாடல் படம் )

உத்தரகாண்ட் மாநிலம் ஹசரிபாக் மாவட்டத்தில் உள்ள பரியநாத் என்ற இடத்தைச் சேர்ந்த விவசாயி மிதிலேஷ் மேத்தா டிராக்டர் ஒன்றை கடனுக்கு வாங்கி இருந்தார். கடந்த சில மாதங்களாகக் கடன் தவனையை செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதனால் கம்பெனியில் இருந்து 1.3 லட்சம் ரூபாயை உடனே செலுத்தும்படி மேத்தாவுக்கு மெசேஜ் வந்தது. பணத்தைக் கட்டவில்லையெனில் டிராக்டரை பறிமுதல் செய்துவிடுவோம் என்று மிரட்டி இருந்தனர். உடனே விவசாயி தான் டிராக்டர் நிறுத்தி இருக்கும் இடத்துக்கு விரைந்து சென்றார்.

இறந்த 22 வயது கர்ப்பிணி பெண்
இறந்த 22 வயது கர்ப்பிணி பெண்

ஆனால், டிராக்டர் கம்பெனி கடன் வசூலிப்பு ஏஜென்டுகள் டிராக்டரை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர். ஓடி வந்த விவசாயி ரூ.1.2 லட்சத்தை உடனே செலுத்துவதாகத் தெரிவித்தார். ஆனால், முழு தொகையையும் செலுத்தினால் மட்டுமே வண்டியை ஒப்படைக்க முடியும் என்று தெரிவித்தனர்.

22 வயதாகும் விவசாயியின் மகள் 3 மாத கர்ப்பிணியான நிலையில், வண்டியை எடுத்துச் செல்லாதீர்கள் என்று அங்கு வந்து கெஞ்சியுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவர் டிராக்டர் முன்பாகச் சென்றபோது டிராக்டரில் அடிபட்டு பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து போலீஸார் கடன் வசூலிப்பு ஏஜென்ட் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். நான்கு பேரையும் உடனே கைது செய்ய வேண்டும் என்றும், இறந்து போன பெண்ணின் குடும்பத்துக்கு 20 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றும் கோரி பெண்ணின் உறவினர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டிராக்டர்
டிராக்டர்
மாடல் படம்

போலீஸார் குற்றவாளிகள் உடனே கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்தனர். அதோடு குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படையும் அமைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மகேந்திரா டிராக்டர் நிறுவனம், நடந்த சம்பவத்துக்காக மிகவும் வருத்தப்படுவதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.