Published:Updated:

திருமணத்தை மீறிய உறவு; மகளின் ஆண் நண்பரைக் கொல்ல கூலிப்படையை ஏவிய தந்தை - திருச்சி அதிர்ச்சி!

திருச்சி
News
திருச்சி

அந்தப் பெண்ணுக்கும், அருண்பாபுவுக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியிருக்கிறது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி பாலக்கரை கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அருண்பாபு. இவர் கோட்டை காவல் நிலையம் அருகில் இயங்கிவரும் ஜிம்மில் மேனேஜராக வேலை பார்த்துவருகிறார். இந்த ஜிம்முக்கு பெரிய செட்டித் தெருவைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில மாதங்களாக வந்துகொண்டிருக்கிறார். அதனால், அந்தப் பெண்ணுக்கும், அருண்பாபுவுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியிருக்கிறது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்

இந்த நிலையில், வழக்கம்போல அருண் பாபு ஜிம்முக்குச் சென்றார். அப்போது, அவர் நண்பர்கள் கீழே நிற்பதாகத் தகவல் கிடைத்ததன் பேரில் அவர் ஜிம்மிலிருந்து இறங்கி பழைய கோட்டை ஸ்டேஷன் ரோட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது, இரண்டு டூ வீலர்களில் வந்த ஐந்து பேர்கொண்ட மர்மக் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அருண்பாபுவை வெட்டத் தொடங்கியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சில வெட்டுகள் விழுந்த பின்பு, சுதாரித்துக்கொண்ட அருண்பாபு அரிவாள் வெட்டை கைகளால் தடுத்துத் தப்பி அருகிலிருந்த கடைக்குள் ஓடிப் புகுந்துவிட்டார். அந்தப் பகுதி மக்கள் கூச்சலிட்டு ஒன்றுகூடியதை அடுத்து மர்மக் கும்பல் அங்கிருந்து தப்பித்து, தலைமறைவானது.

அருண்பாபு
அருண்பாபு

இதையடுத்து படுகாயமடைந்த அருண்பாபு அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வழக்கு பதிந்த தில்லை நகர் இன்ஸ்பெக்டர் சிந்துநதி விசாரணை நடத்திவருகிறார்..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்ன நடந்தது என்று வழக்கை விசாரித்துவரும் போலீஸாரிடம் பேசினோம். ``கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெண்ணுக்கு இளைஞர் ஒருவருடன் திருமணம் நடந்திருக்கிறது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் பெண் அவர் கணவரைப் பிரிந்து தனியாக வசித்துவருகிறார்.

ரத்தக் காயங்களுடன்  மருத்துவமனையில் அனுமதி
ரத்தக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

இந்த நிலையில், அந்தப் பெண் ஜிம்முக்குச் சென்றபோது அருண்பாபுவிடம் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியிருக்கிறது. இந்த விவகாரம் அந்தப் பெண்ணின் தந்தைக்குப் பிடிக்கவில்லை. அருணிடம் பலமுறை இது குறித்து எச்சரித்திருக்கிறார். அவர் கேட்காத பட்சத்தில் கூலிப்படை மூலமாக ஆட்களை அனுப்பி அருண்பாபுவைக் கொல்ல அவர் திட்டமிட்டது தெரியவந்தது.

தலைமறைவாக இருக்கும் அந்தப் பெண்ணின் தந்தையைத் தேடிவருகிறோம். இந்த விவகாரத்தில் அருண்பாபு அந்தப் பெண்ணை மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் இறங்கியிருப்பாரோ என்கிற சந்தேகமும் எழுகிறது. அந்தப் பெண்ணிடமும், அவர் தந்தையிடமும் விசாரித்தால் உண்மை தெரியவரும்" என்றனர்.