Published:Updated:

ஆர்யன் கான் மீது குற்றப்பத்திரிகை... மேலும் 3 மாத அவகாசம் கேட்கும் அதிகாரிகள்!

ஆர்யன் கான்

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் மீதான போதைப்பொருள் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் 3 மாதம் அவகாசம் கொடுக்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆர்யன் கான் மீது குற்றப்பத்திரிகை... மேலும் 3 மாத அவகாசம் கேட்கும் அதிகாரிகள்!

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் மீதான போதைப்பொருள் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் 3 மாதம் அவகாசம் கொடுக்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Published:Updated:
ஆர்யன் கான்

நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், கடந்த அக்டோபர் மாதம் மும்பையிலிருந்து கோவா சென்ற பயணிகள் கப்பலில் நண்பர்களுடன் சேர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறி மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தியபோது அவரைக் கைதுசெய்தனர். ஆர்யன் கானும், அவருடன் கைதுசெய்யப்பட்டவர்களும் ஒரு மாதம் வரை சிறையில் இருந்தனர். ஆரம்பத்தில் இவ்வழக்கு விசாரணையை, ரெய்டு நடத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே நடத்தினார். ஆனால் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக், பாஜக-வின் துணையோடு சமீர் வான்கடே மிரட்டிப் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபடுவதாக அடுக்கடுக்காக குற்றம்சாட்டினார். இதையடுத்து சமீர் வான்கடே இவ்வழக்கு விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

ஆர்யன் கான்
ஆர்யன் கான்

தற்போது டெல்லியைச் சேர்ந்த போதைப்பொருள் சிறப்பு விசாரணைக்குழு இந்த வழக்கை விசாரித்துவருகிறது. ஏற்கெனவே சம்பவம் நடந்து ஆறு மாதங்களாகிவிட்டன. இவ்வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. போதைப்பொருள் தடுப்பு சட்டப்படி 180 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால், குற்றப்பத்திரிகை செய்யக் கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிந்துவிட்டது. இது குறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ``இவ்வழக்கு விசாரணை இன்னும் முடியவில்லை. எனவே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் 90 நாள்கள் அவகாசம் கொடுக்கும்படி சிறப்பு நீதிமன்றத்தில் கேட்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார். ஆர்யன் கான் தொடர்பான வழக்கில் மொத்தம் 19 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் 17 பேர் இப்போது ஜாமீனில் இருக்கின்றனர். ஆர்யன் கான் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விசாரணையில் ஐந்து நாள்கள் இருந்தார். மொத்தம் 27 நாள்கள் சிறைக்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism