Published:Updated:

சென்னை: கேக் ஆர்டர் கொடுப்பதுபோல செயின் பறிப்பு! - சிசிடிவி-யால் சிக்கிய ஆட்டோ டிரைவர்

செயின் பறிப்பு

கேக் ஆர்டர் கொடுப்பதுபோல தங்க செயினைப் பறித்த ஆட்டோ டிரைவரை போலீஸார் கைதுசெய்தனர்.

சென்னை: கேக் ஆர்டர் கொடுப்பதுபோல செயின் பறிப்பு! - சிசிடிவி-யால் சிக்கிய ஆட்டோ டிரைவர்

கேக் ஆர்டர் கொடுப்பதுபோல தங்க செயினைப் பறித்த ஆட்டோ டிரைவரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
செயின் பறிப்பு

சென்னையை அடுத்த மதுரவாயலைச் சேர்ந்தவர் நீலா (38). இவர் திருவேற்காடு காவல் நிலையத்தில் கடந்த 18.1.2022-ம் தேதி கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மதுரவாயல், வெங்கடேஷ்வரா நகரில் குடியிருந்துவருகிறேன். என்னுடைய கணவர் பெயர் நடேசன். அவர் திருவேற்காடு வேலப்பன்சாவடி ரோட்டில் பராசக்தி நகரில் பேக்கரிக் கடை நடத்திவருகிறார். 19-ம் தேதி கடையில் பணியாளர் இல்லை என்பதால் நான் மட்டும் வியாபாரத்தை கவனித்துக்கொண்டிருந்தேன்.

முதல் தகவல் அறிக்கை
முதல் தகவல் அறிக்கை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போது சுமார் மாலை 4:45 மணியளவில் ஒரு நபர் கடைக்கு வந்து கேக் ஆர்டர் கொடுக்க வேண்டும் என்று கூறி பேசிக்கொண்டிருந்தார். அப்போது நான் கழுத்தில் அணிந்திருந்த 12 கிராம் எடையுள்ள தங்க செயினை அந்த நபர் பறித்துக்கொண்டு பைக்கில் வேகமாக சென்று விட்டார். எனது தங்க செயினை பறித்துச் சென்ற நபரைக் கண்டுபிடித்து, தங்க செயினை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தனர். திருவேற்காடு பகுதியிலிருந்து தி.நகர் பகுதி வரை பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்ததில் செயின் பறிப்பில் ஈடுபட்டது தி.நகரைச் சேர்ந்த ஏழுமலை என்கிற துரை (33) எனத் தெரியவந்தது. ஆட்டோ டிரைவரான ஏழுமலை, சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் செயின் பறிப்பில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஏழுமலையை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர.