Published:Updated:

தவறான நட்பால் தடம் மாறிய வாழ்க்கை; ஆண் நண்பருடன் சிக்கிய பெண் - டிரைவரின் தலையை தேடும் போலீஸ்!

க்ரைம் - கொலை

தலையை துண்டித்து கொலைசெய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் சிராஜூதின் கொலை வழக்கில், ஆண் நண்பருடன் சிராஜூதினின் தோழியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தவறான நட்பால் தடம் மாறிய வாழ்க்கை; ஆண் நண்பருடன் சிக்கிய பெண் - டிரைவரின் தலையை தேடும் போலீஸ்!

தலையை துண்டித்து கொலைசெய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் சிராஜூதின் கொலை வழக்கில், ஆண் நண்பருடன் சிராஜூதினின் தோழியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
க்ரைம் - கொலை

சென்னை, பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கத்திலிருந்து கன்னப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள குப்பை கொட்டும் இடத்தில் தலை, இரண்டு கைகள் இல்லாமல் ஒரு ஆண் சடலம் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த திருவேற்காடு போலீஸார், அந்த சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டவர் யாரென்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் இறந்தவர் மாங்காடு சாதிக் நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிராஜூதின் என்று தெரியவந்தது.

சிராஜூதின் கொலை
சிராஜூதின் கொலை

அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பதை கண்டறிய போரூர் உதவி கமிஷனர் ராஜூவ் பிரின்ஸ் ஆரோன், திருவேற்காடு இன்ஸ்பெக்டர் ஆனந்த் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்க ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். தனிப்படை போலீஸார், சடலம் கிடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் சிராஜூதினின் செல்போன் நம்பருக்கு வந்த அழைப்புகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, மாங்காடு பகுதியைச் சேர்ந்த சிராஜூதினின் தோழி ஜூனத் குறித்த தகவல் போலீஸாருக்கு தெரியவந்தது. அதனால் அவரிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து போலீஸார், ``சிராஜூதின் கொலை செய்யப்படுவதற்கு முன்பு, தன்னுடைய ஆட்டோவில் பூந்தமல்லியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றதை சிசிடிவி மூலம் உறுதிப்படுத்தினோம். பின்னர் அவர் மது அருந்திவிட்டு ஜூனத் வீட்டுக்கு சென்றுவிட்டு அங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டு சென்றதையும் அடுத்தடுத்த சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறிந்தோம். அதனால் ஜூனத்திடம் சிராஜூதின் குறித்து விசாரித்தபோது 2016-ம் ஆண்டு விருகம்பாக்கத்தில் நடந்த துணை நடிகை ஜெயசீலி கொலை வழக்கு குறித்த தகவல் தெரியவந்தது.

கைதான மகேஷ், ஜூனத்
கைதான மகேஷ், ஜூனத்

துணை நடிகை ஜெயசீலி கொலை வழக்கில் கைதான சிராஜூதின், சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் வந்தார். அதற்குள் ஜூனத்துக்கு இன்னொரு ஆட்டோ டிரைவர் மகேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் சிராஜூதினுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் துணை நடிகை ஜெயசீலி கொலை வழக்குக்குப் பிறகு ஜூனத்திடமிருந்து சிராஜூதின் அதிகளவில் பணம் வாங்கியதாக தெரிகிறது. அந்தப் பணத்தையும் சிராஜூதின் திரும்ப கொடுக்கவில்லை. அதனால் சிராஜூதினுக்கும் ஜூனத்துக்கும் இடையே தகராறு இருந்த வந்தது. இந்தநிலையில்தான் மதுபோதையில் சிராஜூதின் ஜூனத் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது அங்கு வீட்டிலிருந்த மகேஷுக்கும், சிராஜூதினுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மகேஷ், சிராஜூதினை கொலைசெய்துவிட்டு தலை, இரண்டு கைகளையும் துண்டாக வெட்டி பைக் மூலம் காட்டுப்பகுதியில் வீசியுள்ளார். பின்னர் தலை இல்லாத சிராஜூதினின் சடலத்தை குப்பை மேட்டில் வைத்து எரித்துள்ளார். அவரின் ஆட்டோவை ஆவடி பகுதியில் நிறுத்தி விட்டு மகேஷ், வழக்கம் போல இருந்துள்ளார். ஜூனத்தும் எதுவும் நடக்காதது போல அன்றாட பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். ஜூனத் வீட்டுக்குச் சென்ற பிறகுதான் சிராஜூதின் கொலை செய்யப்பட்டது தெரிந்தது, அதைத் தொடர்ந்து விசாரணையை நடத்தினோம்.

கைது
கைது

இந்தச் சமயத்தில்தான் சிராஜூதின் நண்பர் ஒருவர் குறித்த தகவல் கிடைத்தது. அவரிடம் விசாரித்தபோதுதான் மகேஷ், ஜூனத் குறித்த தகவல்கள் தெரியவந்தன. அவர்களின் வீட்டிலிருந்து மகேஷ், பைக்கில் பையோடு செல்லும் காட்சிகளும் பதிவாகியிருந்தன. அதனால் மகேஷிடம் விசாரித்தபோது ஜூனத்திடம் வாங்கிய கடனை சிராஜூதின் கொடுக்கவில்லை. அதனால் ஏற்பட்ட தகராறில் சிராஜூதினைக் கொலை செய்ததாகக் கூறினார். ஆனால், ஜூனத் வேறு ஒரு தகவலை விசாரணையின்போது தெரிவித்தார். அதில், பணத்தகராறு மட்டுமல்லாமல் பாலியல் தொல்லை குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார். அதன்அடிப்படையில் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism