Published:Updated:

`போதையில் தூங்கிய வாலிபர்... பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற டிரைவர்!'- முன்பகையால் நேர்ந்த விபரீதம்

மது போதையில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார் அந்த வாலிபர். அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ், தனது ஆட்டோவில் இருந்த பெட்ரோலை எடுத்து, தூங்கிக்கொண்டிருந்த ஜெய்சங்கர் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

முன்விரோதத்தால் பெட்ரோல் ஊற்றி வாலிபர் கொலை.
முன்விரோதத்தால் பெட்ரோல் ஊற்றி வாலிபர் கொலை. ( விகடன் )

ராமநாதபுரத்தில், முன்விரோதம் காரணமாக மது போதையில் தூங்கியவரை பெட்ரோல் ஊற்றிக் கொலைசெய்த ஆட்டோ டிரைவரை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட வாலிபர் ஜெய்சங்கர்.
கொலை செய்யப்பட்ட வாலிபர் ஜெய்சங்கர்.
உ.பாண்டி

ராமநாதபுரம் பாலசுப்பிரமணியன் கோயில் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரனின் மகன், ஜெய்சங்கர் (35). இவருக்கும் ராமநாதபுரம் சாயக்கார ஊரணி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் ஜெய்சங்கர், கேணிக்கரை சந்திப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையின் எதிரில், நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ், தனது ஆட்டோவில் இருந்த பெட்ரோலை எடுத்துவந்து, தூங்கிக்கொண்டிருந்த ஜெய்சங்கர் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

வாலிபரைக் கொலை செய்த ஆட்டோ டிரைவர் சுரேஷ்.
வாலிபரைக் கொலை செய்த ஆட்டோ டிரைவர் சுரேஷ்.
உ.பாண்டி

தீக்காயமடைந்த ஜெய்சங்கர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வாலிபர் ஜெய்சங்கர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, ஜெய்சங்கர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த ஆட்டோ டிரைவர் சுரேஷை கேணிக்கரை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.