Published:Updated:

5,000 கார்களை திருடிய ஆட்டோ ஓட்டுநர்; 3 மனைவிகளுடன் ஆடம்பர வாழ்க்கை - `பலே’ கார் திருடன் கைது

திருட்டு

அனில் 1995 காலகட்டத்தில் டெல்லியின் கான்பூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருந்திருக்கிறார். அந்த காலகட்டத்தில்ல் மாருதி 800 கார்களைத்தான் அதிகமாகத் திருடியிருக்கிறார்.

டெல்லி போலீஸார் இந்தியாவின் மிகப்பெரிய கார் திருடனான அனில் சௌகான் (52) என்பவரைக் கைதுசெய்துள்ளனர். இவர் டெல்லி, மும்பை என வடகிழக்குப் பகுதிகளில் சொத்துகள் சேர்த்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துவந்திருக்கிறார்.

டெல்லி சிறப்புக் காவல்துறையினர் இவரை தேஷ் பண்டு குப்தா சாலையில் வைத்து கைதுசெய்துள்ளனர். இவர் கடந்த 27 ஆண்டுகளில் 5,000 கார்களைத் திருடிய மிகப்பெரிய திருடன் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

5,000 கார்களை திருடிய ஆட்டோ ஓட்டுநர்; 3 மனைவிகளுடன் ஆடம்பர வாழ்க்கை - `பலே’ கார் திருடன் கைது

போலீஸ் தரப்பில் இது குறித்துக் கூறுகையில், ``அனில் 1995 காலகட்டத்தில் டெல்லியின் கான்பூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருந்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் மாருதி 800 கார்களைத்தான் அதிகமாகத் திருடியிருக்கிறார். அனில், கார்களை இந்தியாவின் பல பாகங்களிலுமிருந்து திருடி, நேபால், ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் விற்றிருக்கிறார். கார் திருட்டின்போது பல கார் உரிமையாளர்களை கொல்லவும் செய்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தற்போது ஆயுதக் கடத்தல் தொழிலிலும் ஈடுபட்டுவந்திருக்கிறார். உ.பி-யிலிருந்து ஆயுதங்களைக் கடத்தி, அதை வடகிழக்கு பகுதிகளிலுள்ள தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு விற்றிருக்கிறார்” எனவும் போலீஸார் கூறியுள்ளனர்.

5,000 கார்களை திருடிய ஆட்டோ ஓட்டுநர்; 3 மனைவிகளுடன் ஆடம்பர வாழ்க்கை - `பலே’ கார் திருடன் கைது

தற்போது அஸ்ஸாமுக்குக் குடிபெயர்ந்து ஆடம்பரமாக வாழ்ந்துவந்திருக்கிறார். விசாரணை நிறுவனம் ஒன்றும் இவர்மீது பண மோசடி வழக்கு பதிவுசெய்துள்ளது. இவர்மீது 180 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பலமுறை கைதுசெய்யப்பட்டிருக்கிறார். 2015-ல் சிறையில் அடைக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகள் தண்டனைக் காலம் முடிந்து 2020-ல் வெளியே வந்திருக்கிறார்.

ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துவந்த அனிலுக்கு மூன்று மனைவிகளும், ஏழு பிள்ளைகளும் உள்ளனர். நிறைய அரசியல் புள்ளிகளின் தொடர்பும் இவருக்கு இருந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.