Published:Updated:

சென்னை: நண்பன் செய்த துரோகம் - கொலை செய்த ஆட்டோ டிரைவர்!

கொலை
கொலை ( representational image )

சென்னை கண்ணகி நகரில், நண்பன் செய்த துரோகத்தால் ஆட்டோ டிரைவர் அவரைக் கொலை செய்தார்.

சென்னை கண்ணகிநகரைச் சேர்ந்தவர் ரகு. ஆட்டோ டிரைவர். இவரின் மனைவி வினோதினி. ரகுவின் நண்பன் கார்த்திக் என்கிற பிளாக்கி (20). இவர், மயிலாப்பூரில் குடியிருந்துவருகிறார். ரகுவின் வீட்டுக்கு கார்த்திக் அடிக்கடி வருவார். வினோதினியுடன் அவர் பழகியிருக்கிறார்.

கொலை
கொலை
representational image

இந்தநிலையில் வினோதினி, கார்த்திக் ஆகியோரின் நட்பில் ரகுவுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அதனால், கார்த்திக்கை ரகு கண்டித்திருக்கிறார். அதையும் மீறி, வினோதினியும் கார்த்திக்கும் பழகிவந்தனர். தன்னுடைய உயிர் நண்பனான கார்த்திக் செய்த துரோகம், ரகுவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதனால் கார்த்திக்கைக் கொலை செய்ய ரகு திட்டமிட்டார்.

நேற்றிரவு மயிலாப்பூரிலிருந்து கண்ணகி நகருக்கு கார்த்திக் வந்தார். இந்தத் தகவல் கிடைத்ததும், ரகுவும் அவரின் கூட்டாளிகளான தீனா (19), ஜெயராஜ் (19) ஆகியோரும் கார்த்திக்கை கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டிருக்கிறார்கள். கார்த்திக் கண்ணகி நகருக்குள் வந்ததும், அவரைச் சுற்றி வளைத்து அரிவாள், கத்தியால் குத்தினர். அதனால் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த கார்த்திக் உயிருக்குப் போராடியிருக்கிறார். ரகுவும் அவரின் கூட்டாளிகளும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே கார்த்திக் உயிரிழந்திருக்கிறார்.

கொலை
கொலை
representational image

இது குறித்துத் தகவலறிந்ததும், கண்ணகி நகர் இன்ஸ்பெக்டர் வீரக்குமார் தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்தனர். கார்த்திக்கின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், கொலை நடந்த இரண்டு மணி நேரத்தில் அந்தப் பகுதியில் பதுங்கியிருந்த தீனா, ஜெயக்குமார் ஆகியோரைக் கைதுசெய்தனர். தலைமறைவாக இருக்கும் ரகுவை போலீஸார் தேடிவருகின்றனர்.

இது குறித்து கண்ணகி நகர் போலீஸார் கூறுகையில், ``சில தினங்களுக்கு முன்னர் வீட்டைவிட்டு வெளியில் சென்ற ரகுவின் மனைவி வினோதினி, அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அதனால் அவரைப் பல இடங்களில் ரகு தேடியிருக்கிறார். அப்போது வினோதினி மயிலாப்பூரில் கார்த்திக் வீட்டில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று வினோதினியை ரகு வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்.

கொலை
கொலை
representational image
தொழில் போட்டி காரணமா? - ஹோட்டல் நடத்திவந்த திருநங்கை கொலை; கோவை அதிர்ச்சி

அதன் பிறகுதான் கார்த்திக்குக்கும் வினோதிக்கும் இடையே இருந்த நட்பு ரகுவுக்கு தெரியவந்திருக்கிறது. மனைவியையும் நண்பனையும் ரகு ஆரம்பத்திலேயே கண்டித்திருக்கிறார். ஆனால் இருவரும் கேட்கவில்லை. அதனால்தான் கார்த்திக்கை ரகு கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு