Published:Updated:

சென்னை: அட்ரஸ் கேட்பதுபோல செல்போன் திருடும் ஆட்டோ ஓட்டுநர் - சிக்கியது எப்படி?

திருட்டு ( representational image )

சென்னையில் முகவரி கேட்பதுபோல கவனத்தை திசைதிருப்பி செல்போன் திருடிய ஆட்டோ ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னை: அட்ரஸ் கேட்பதுபோல செல்போன் திருடும் ஆட்டோ ஓட்டுநர் - சிக்கியது எப்படி?

சென்னையில் முகவரி கேட்பதுபோல கவனத்தை திசைதிருப்பி செல்போன் திருடிய ஆட்டோ ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
திருட்டு ( representational image )

சென்னை திருவெற்றியூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்க செல்வம் (60). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக, திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே நின்றுகொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த இருவர் முகவரி கேட்டு விசாரித்துள்ளார்கள். தங்க செல்வத்திடம், அவரையே வந்து வழி காட்டும்படியும், போகும் வழியில் அவரை இறக்கிவிடுவதாகவும் கூறி வற்புறுத்தியுள்ளார்கள்.

கைது
கைது

அவரும் அந்த வழியில்தான் வீட்டுக்குப் போக வேண்டும் என்பதால் ஆட்டோவில் ஏறிச் சென்றிருக்கிறார். அப்போது, ஜீவன்லால் நகர் அருகே தங்க செல்வத்தை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். வீட்டுக்கு நடந்து போகும்போதுதான் தன்னுடைய செல்போன் மாயானது அவருக்குத் தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த தங்க செல்வம் செல்போன் காணாமல் போனது குறித்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வுசெய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த விசாரணையில், தங்க செல்வத்திடம் செல்போன் பறித்தது, தண்டையார்பேட்டையைப் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (23) என்பதும், திருவொற்றியூர் சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் (28) என்பதும் தெரியவந்தது. இவர்களைக் கைதுசெய்த காவல்துறையினர் அவர்களிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். வட சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களின் முக்கியக் குறியே வயதானவர்கள்தான்.

கைது செய்யப்பட்ட நபர்கள்
கைது செய்யப்பட்ட நபர்கள்

இவர்கள் இருவரும் கூட்டாகச் சேர்ந்து வயதானவர்களிடம் முகவரி கேட்பதுபோல ஆட்டோவில் ஏற்றி, அவர்களின் கவனத்தை திசை திருப்புவார்கள். அவர்கள் அசந்த நேரத்தில், பின்னல் உட்கார்ந்திருப்பவர் செல்போனைத் திருடிவிடுவார். செல்போனைத் திருடியவுடன் அவர்களை ஆட்டோவிலிருந்து இறக்கி விட்டுவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பித்துச் சென்றுவிடுவதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார்கள். இவர்களிடமிருந்து மூன்று செல்போன்கள், ஒரு ஆட்டோவை போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism