Published:Updated:

2008 ஆசிட் வீச்சு வழக்கில் 3 பேர்; 2019 டாக்டர் கொலையில் 4 பேர்!- `என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' சஜ்ஜனார்

வி.சி.சஜ்ஜனார் ஐ.பி.எஸ்.
வி.சி.சஜ்ஜனார் ஐ.பி.எஸ்.

சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.சஜ்ஜனார் ஐ.பி.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். இவரைத் தெலங்கானா மக்கள் நிஜ ஹீரோ என்று அழைக்கின்றனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்துக்கு அருகில் உள்ள ஷம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த பெண் மருத்துவர், நான்கு பேர் கொண்ட கும்பலால் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக சிவா (20), சென்னகேசவலு (20), முகமது ஆரிஃப் (26), நவீன் (20) ஆகிய 4 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. நீதிமன்ற அனுமதியின்பேரில் 4 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

என்கவுன்டர் செய்யப்பட்டவர்கள்
என்கவுன்டர் செய்யப்பட்டவர்கள்
`அதே இடம்; 4 பேரும் 4 திசை!- பெண் மருத்துவர் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

இந்த நிலையில், சம்பவம் நடந்த இடத்துக்கு 4 பேரை இன்று அதிகாலை போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, பெண் மருத்துவரைக் கொலை செய்தது எப்படி என 4 பேரும் நடித்துக்காட்டினர். பொழுதுவிடியத் தொடங்கியதும் 4 பேரும் போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்க முடிவு செய்து இன்ஸ்பெக்டர் ஒருவரின் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வானத்தை நோக்கிச் சுட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தப்பி ஓட முயன்ற 4 பேரையும் போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். இந்த என்கவுன்டரில் 4 பேரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் 6 போலீஸாருக்குக் காயம் ஏற்பட்டதாக தெலங்கானா போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நடந்த இடம், சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி. சஜ்ஜனார் ஐ.பி.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். இவரைத் தெலங்கானா மக்கள் நிஜ ஹீரோ என்று சொல்கின்றனர். தற்போது வி.சி.சஜ்ஜனார் குறித்த தகவல்கள் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

வி.சி.சஜ்ஜனார் ஐ.பி.எஸ்
வி.சி.சஜ்ஜனார் ஐ.பி.எஸ்

`யார் இந்த சஜ்ஜனார் ஐ.பி.எஸ்?' எனப் போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்.

1996-ம் ஆண்டு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான வி.சி.சஜ்ஜனார், ஒரு என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட். வாரங்கல் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு இன்ஜினீயரிங் மாணவியை ஒருதலையாகக் காதலித்த நபர் சக கூட்டாளிகளுடன் சேர்ந்து அவர் மீது ஆசிட் வீசினார். அப்போது வி.சி.சஜ்ஜனார் அந்த மாவட்டத்தின் எஸ்.பி-யாகப் பணியாற்றி வந்தார்.

இந்த வழக்கில் ஸ்ரீனிவாசராவ், ஹரிகிருஷ்ணா, சஞ்சய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அப்போது, சஜ்ஜனார் கட்டுப்பாட்டிலிருந்த போலீஸ் டீம், மூன்று பேரையும் சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தது. அந்தச் சமயத்தில் போலீஸாரின் பிடியிலிருந்து மூன்று பேரும் தப்பி ஓட முயன்றதால் அவர்கள் என்கவுன்டர் செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் வி.சி.சஜ்ஜனாரை ஒரு தரப்பினர் பாராட்டினர். ஆனால், இன்னொரு தரப்பினர் இது போலி என்கவுன்டர் எனக் குற்றம் சாட்டினர். ஆனால், அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை.

என்கவுன்டர் நடந்த இடம்
என்கவுன்டர் நடந்த இடம்

இதையடுத்து, 11 ஆண்டுகளுக்குப்பிறகு சைபராபாத் போலீஸ் கமிஷனராகப் பதவியேற்றார். இந்தநிலையில், பெண் மருத்துவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தன்னுடைய ஸ்டைலில் 4 பேரையும் சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்க ஹைதராபாத் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார் சஜ்ஜனார். அதன்பேரில் 4 பேரும் அழைத்துச் செல்லப்பட்டபோது என்கவுன்டர் சம்பவம் நடந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் வி.சி.சஜ்ஜனார் திறமையானவர். சைபராபாத் போலீஸ் கமிஷனரின் இணையதள பக்கத்தில், `உங்கள் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்' என்ற வாசகம் உள்ளது.

சைபராபாத் கமிஷனர் அலுவலக இணையதள முகவரி
சைபராபாத் கமிஷனர் அலுவலக இணையதள முகவரி

மேலும், நக்சல் ஒழிப்புப் பிரிவில் சிறப்பு அதிகாரியாக சஜ்ஜனார் பணியாற்றிய போது நக்சலைட் நயீமுதின் என்பவர் கொல்லப்பட்ட சம்பவத்திலும் இவரின் பங்கு முக்கியமானது என்கின்றனர் போலீஸ் வட்டாரத்தில்.

அடுத்த கட்டுரைக்கு