Published:Updated:

சென்னை வங்கி நகைக் கொள்ளை - வெப் சீரிஸை மிஞ்சும் பின்னணிக் கதை!

வங்கி நகைக் கொள்ளை

சென்னை தனியார் வாங்கியில் நடைபெற்ற நகைக் கொள்ளையில் சினிமாவில் வரும் காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு பல்வேறு அதிர்ச்சிகர சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

சென்னை வங்கி நகைக் கொள்ளை - வெப் சீரிஸை மிஞ்சும் பின்னணிக் கதை!

சென்னை தனியார் வாங்கியில் நடைபெற்ற நகைக் கொள்ளையில் சினிமாவில் வரும் காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு பல்வேறு அதிர்ச்சிகர சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

Published:Updated:
வங்கி நகைக் கொள்ளை

சென்னை, அரும்பாக்கம் பகுதியில் உள்ள ரசாக் கார்டன் சாலையில் பெடரல் வங்கியின் தங்க நகைக் கடன் பிரிவின் கிளை செயல்பட்டுவருகிறது. இங்குக் கடந்த 13-ம் தேதி பணியிலிருந்த காவலருக்குக் குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து, வங்கியில் பணியாற்றிய ஊழியர்களைக் கட்டிப்போட்டு வங்கியில் கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த கொள்ளை சம்பவத்தில் வங்கியில் அடகுவைக்கப்பட்டிருந்த 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வங்கியின் கிளை மேலாளர் சுரேஷ் என்பவர் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்க நகைகள்!
கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்க நகைகள்!

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். கூடுதல் கமிஷனர் அன்பு, இணை கமிஷனர் ராஜேஸ்வரி, அண்ணாநகர் துணை கமிஷனர் விஜயகுமார் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த கொள்ளையில், அதே வங்கியில் பணியாற்றிய முருகன் மாஸ்டர் மைண்டாக செயல்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். வங்கி கொள்ளையர்களைப் பிடிக்கும் காவல்துறையினருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவித்திருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாகத் தனிப்படை காவல்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ``சம்பவம் நடந்த அன்று அந்த வங்கியில் பணியாற்றிய முருகன் என்பவர் வங்கிக்கு வந்திருக்கிறார். அவர் அங்கு ஏற்கனவே பணியாற்றியவர் என்பதனால், அங்கிருந்தவர்கள் அவருடன் எப்போதும்போல சகஜமாகப் பேசியிருக்கிறார்கள். அவர் வங்கிக் காவலாளிக்குக் குளிர்பானத்தைக் கொடுத்து குடிக்கச்சொல்லி வற்புறுத்தியிருக்கிறார். அவர் வேண்டாம் என்று சொல்லியும் தொடர்ந்து குடிக்க வற்புறுத்தியிருக்கிறார். அந்த குளிர்பானத்தில் மயக்கமருந்து கலக்கப்பட்டிருந்தது.

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை
அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை

காவலாளி மயக்கமடைந்த நிலையில், வங்கிக்குள் நுழைந்த முருகன், அவரது நண்பர்கள் அங்கிருந்தவர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டித் தனி அறையில் கட்டிப்போட்டிருக்கிறார்கள். சாவியைக் கைப்பற்றியவர்கள், அங்குள்ள ஸ்ட்ராங் ரூம் உள்ளே நுழைந்து அங்கிருந்த நகைகளைக் கொள்ளையடுத்து தப்பித்துச் சென்றிருக்கிறார்கள். பிறகு அந்த வங்கிக்கு வாடிக்கையாளர் ஒருவர் வரும்போது வங்கியின் கதவு மூடப்பட்டிருந்தது. வங்கியின் உள்ளே சத்தம் கேட்டதை அடுத்து அவர் உள்ளே சென்று பார்த்திருக்கிறார். அதற்கு பிறகுதான் வங்கியில் கொள்ளை நடந்தது தெரியவந்தது. சம்பவம் குறித்து அறிந்துச் சென்ற அரும்பாக்கம் பகுதி போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

அந்த வங்கியில் முருகன் முன்பு வேலை பார்த்ததனால் அவருக்கு அந்த வங்கியில் சி.சி.டி.வி கேமரா இங்கிருக்கும் என்ற அனைத்து விவரங்களும் நன்றாகத் தெரிந்துள்ளது. உள்ளே நடந்தது எதுவும் தெரியாமல் இருக்க அங்கிருந்த கண்காணிப்பு கேமராவுக்கு ஸ்பீரே அடித்துவிட்டார்கள். நகைகளை கொள்ளையடுத்து விட்டு அதை மூட்டையில் காட்டிக்கொண்டு அங்கிருந்து காரில் தப்பித்துச் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற காரின் நம்பரைக் கொண்டு அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த வழக்கைப் பொறுத்தவரை, குற்றத்தில் ஈடுபட்டவரின் விவரம் முதலிலேயே தெரிந்துவிட்டது. முருகன் மற்றும் அவரது நண்பர்களை அவர்களின் செல்போன் எண் கொண்டு விரைவில் தேடிக் கண்டுபிடித்துவிட்டோம்.

முருகன்
முருகன்

முருகன், பாலாஜி, சந்தோஷ் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 8 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் இன்னும் பலருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. விசாரணையைத் தீவிரப்படுத்தினோம். முருகன் கொள்ளையில் தனது நண்பர்களையும், உறவினர்களையும் ஈடுபடுத்தியிருக்கிறார். இதற்காகக் கொள்ளையில் ஈடுபடுவதற்கு முன்பாக பத்து நாள்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். கொள்ளையடித்த நகைகளை தங்கக்கட்டிகளாக உருக்கி அதனைப் பிரித்துக் கொள்வது இவர்களின் முதல் திட்டமாக இருந்துள்ளது. இதற்காக நகை உருக்கும் இயந்திரத்தை வாங்கியிருக்கிறார்கள்.

கொள்ளையடித்த பிறகு பல்லாவரத்தில் உள்ள ஒரு லாட்ஜூக்குச் சென்று நகைகளை உருக்க தொடங்கியிருக்கிறார்கள். அதிக அளவு புகை வந்ததனால் அந்த திட்டத்தைக் கைவிட்டு நகையாகவே பங்கு பிரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக யாராவது ஒருவர் மாட்டிக்கொண்டால், வெளியில் இருக்கும் இன்னொருவர் பெயிலில் எடுப்பது இவர்களின் திட்டம். கைது செய்யப்பட்ட சந்தோஷிடம் நடத்திய விசாரணையில், இந்த கொள்ளையில் செங்கல்பட்டு மாவட்டம், அச்சரம்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமல்ராஜிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரின் வீட்டில் நடத்திய சோதனையில் அவரிடமிருந்து 3.590 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு, சந்தோஷின் பாட்டி வீட்டிலிருந்தும் 2.6 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டது.

வங்கி கொள்ளை
வங்கி கொள்ளை

இந்த கும்பலைச் சேர்ந்த சூர்யா கோவைக்குச் சென்று நகைகளைத் தங்கக் கட்டிகளாக மாற்றத் திட்டமிட்டிருந்தார். அவரிடமிருந்த 8.827 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் கோவையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். மொத்தமாக 31.700 கிலோ தங்க நகைகளைப் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும், இந்த கொள்ளை சம்பவத்தில் இன்னும் பலருக்குத் மறைமுகமாக தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவரும்" என்று தெரிவித்தனர். மணி ஹெய்ஸ்ட் என்ற வெப் சீரிஸ் பாணியில் கொள்ளையடிக்கத் திட்டமிட்ட கொள்ளையர்களைத் தமிழ்நாடு காவல்துறையினர் விரைவில் கைது செய்துள்ளனர்.

முருகனுக்கு மிகவும் ஆடம்பரமாக வாழ ஆசை ஏற்பட்டுள்ளது. தனக்கு பழக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வங்கியில் கொள்ளையடிப்பது தொடர்பாக பேசி ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறார். கொள்ளையடித்த நகைகளை தனித்தனியாக பிரித்து சென்று ஒரு இடத்துக்கு கொண்டு செல்லவேண்டும். அங்கே வைத்து விற்பனை செய்துகொள்வது. போலீஸின் கவனத்தை திசை திருப்ப செல்போனை சம்பந்தம் இல்லாத இடத்தில் சுவீட் ஆப் செய்வது சிக்காமல் இருக்க பல்வேறு திட்டங்களை தீட்டியிருக்கிறார்கள். இதற்கான பல திரைப்படங்களை பார்த்திருக்கிறார்கள்.