Published:Updated:

`பிணைத்தொகை, இரு நபர் உத்தரவாதம்!’- சுற்றுச்சுவர் வழக்கில் சிவசுப்ரமணியத்திற்கு நிபந்தனை ஜாமீன்

மனுவில், மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழையின் காரணமாகவே மண் சரிந்து வீட்டின் சுற்றுச்சுவர் எதிர்பாராத விதமாக இடிந்துவிழுந்து அசம்பாவிதம் நிகழ்ந்தது...

சிவசுப்ரமணியம்
சிவசுப்ரமணியம்

மேட்டுபாளையம் சுற்றுசுவர் இடிந்துவிழுந்து 17 பேர் மரணமடைந்த வழக்கில், சிவ சுப்ரமணியத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழை காரணமாக, சிவசுப்பிரமணியம் என்பவரின் வீட்டின் 20 அடி உர சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், அருகில் வசித்த 17 பேர் பலியாகினர்.

`பிணைத்தொகை, இரு நபர் உத்தரவாதம்!’- சுற்றுச்சுவர் வழக்கில் சிவசுப்ரமணியத்திற்கு நிபந்தனை ஜாமீன்

டிசம்பர் 2-ம் தேதி நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக, நில உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது மேட்டுப்பாளையம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, கடந்த 3-ம் தேதி கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தது. இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, நில உரிமையாளர் சிவசுப்பிரமணியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழையின் காரணமாகவே மண் சரிந்து, வீட்டின் சுற்றுசுவர் எதிர்பாராத விதமாக இடிந்துவிழுந்து அசம்பாவிதம் நிகழ்ந்தது. எந்த உள் நோக்கத்துடனும் சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை என்பதால் தனக்கு ஜாமீன் வழங்கினால், இந்த வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி சேஷசாயி விசாரித்து, சிவசுப்ரமணியத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

சுற்றுசுவர்
சுற்றுசுவர்

மேலும், 1 லட்சம் ரூபாய் பிணைத்தொகைகொண்ட இரு நபர் உத்தரவாதம் அளிக்க வேண்டுமெனவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மதுரையில் தங்கியிருந்து, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கினார்.