Published:Updated:

`பாலில் தூக்க மாத்திரை; 10 முறை கத்திக்குத்து!’ - தந்தை கொலையில் மகளின் அதிர்ச்சி வாக்குமூலம்

ராம் பிரசாத்

பெங்களூருவில் 15 வயது சிறுமி தன் தந்தையை எரித்துக்கொன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

crime scene
crime scene

ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெயக்குமார் ஜெயின் பெங்களூருவில் துணி வியாபாரம் செய்து வருகிறார். பெங்களூரு ராஜாஜி நகர் பகுதியில் அவருக்குச் சொந்தமாகக் கடை உள்ளது. 40 வயதான ஜெயக்குமார் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். உறவினரின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக ஜெயக்குமாரின் மனைவியும் மகனும் சென்றுள்ளனர். வீட்டில் ஜெயக்குமாரும் அவரின் 15 வயது மகளும் மட்டுமே இருந்துள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுகிழமை காலை 10.30 மணியளவில் ஜெயக்குமாரின் வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். குளியலறையில் இருந்து புகை கசிந்ததால் அங்கு சென்று பார்த்துள்ளனர். ஜெயக்குமார் பாதி எரிந்த நிலையில் சடலமாக இருந்துள்ளார்.

Murder
Murder

இதையடுத்து உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஜெயக்குமாருடன் அவரின் மகள் இருக்கும் விவரம் தெரிந்தது. அவரிடம் விசாரித்தபோது நான் அம்மா இல்லாததால் உறவினர் வீட்டுக்குச் சாப்பிடச் சென்றுவிட்டேன் எனக்கு ஒன்றும் தெரியாது எனக் கூறியுள்ளார். சிறுமியின் பதிலில் திருப்தியடையாத காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது தன் தந்தையைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டனர். இது காவலர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

காவல்துறை விசாரணையில் சிறுமி தன் ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். போலீஸிடம் அளித்த வாக்குமூலத்தில், ``நானும் இதே பகுதியைச் சேர்ந்த ஒருவரும் நண்பர்களாகப் பழகி வந்தோம். இதை என் தந்தை கண்டித்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு என்னைக் கடுமையாகத் தாக்கினார். இதனால் அவர் மீது இருந்த ஆத்திரத்தில கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

knife
knife

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள். ``ஜெயக்குமார் தன் மகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு அடித்துள்ளார். நண்பருடன் பழகுவதைத் தவிர்க்குமாறு கூறியுள்ளார். மேலும் செல்போன் உபயோகப்படுத்துவதையும், சமூக வலைதளத்தில் நேரத்தை செலவிடுவதையும் தவிர்க்குமாறு கூறுவந்துள்ளார். தன் தந்தை மீதிருந்த ஆத்திரத்தில் கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்குத் தன் நண்பரையும் அழைத்துள்ளார். ஜெயக்குமாருக்குப் பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளனர். அவர் மயக்கமடைந்ததும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். அவரது உடலில் 10 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. பெட்ரூம் மற்றும் தரையில் இருந்த ரத்தக்கறையை இருவரும் சேர்ந்து சுத்தம் செய்துள்ளனர். தடயங்களையும் அழித்துள்ளனர். ஜெயக்குமாரின் உடலை வெளியில் எங்காவது தூக்கி வீசத்தான் இருவரும் முடிவு செய்துள்ளனர். உடலைக் கொண்டு செல்லும்போது மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தால் பாத்ரூமில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். அதன் பின் இருவரும் வெளியேறிவிட்டனர். பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமார் சடலம் கைப்பற்றப்பட்டது. உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறுமியும் அவரின் ஆண் நண்பரையும் (18 வயது) கைது செய்துள்ளோம்” எனக் கூறினர்.