Published:Updated:

பெங்களூரு: கணவனின் கொடூர சித்ரவதை... விபரீத முடிவெடுத்த பத்திரிகையாளர்!

தற்கொலை

பிரபல பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர், கணவரின் சித்ரவதையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு: கணவனின் கொடூர சித்ரவதை... விபரீத முடிவெடுத்த பத்திரிகையாளர்!

பிரபல பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர், கணவரின் சித்ரவதையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
தற்கொலை

தற்கொலை:

பெங்களூரில், பிரபல தனியார் பத்திரிகை நிறுவனத்தில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிவந்தவர் சுருதி நாராயணன் (37). இவர் கேரளாவைச் சேர்ந்தவர். கடந்த 2017-ம் ஆண்டு சுருதிக்கும் கேரளாவைச் சேர்ந்த அனிஷ் கோயாடன் என்பவருக்கும் திருமணம் ஆனது. திருமணத்துக்குப் பின்னர் பெங்களூரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருவரும் வாழ்ந்துவந்துள்ளனர். திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆன நிலையிலும், இந்தத் தம்பதியருக்குக் குழந்தை கிடையாது. இந்த நிலையில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை அன்று சுருதியின் அம்மாவும், அவரின் சகோதரரும் பலமுறை சுருதிக்குப் போன் செய்திருக்கின்றனர். ஆனால், சுருதி அழைப்பை ஏற்கவில்லை.

அனிஷ் - சுருதி
அனிஷ் - சுருதி

மேலும், கடந்த திங்கள் அன்று சுருதி வேலைக்கும் செல்லவில்லை. இதுவரை அப்படி அவர் இருந்ததில்லை என்பதால், செவ்வாய்கிழமை அன்று பெங்களூரில் வசிக்கும் சுருதியின் சகோதரர் நிஷாந்த் அவரின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று பார்த்தார். வீடு உள்பக்கம் பூட்டியிருந்ததால், குடியிருப்பு காவலாளிகள் உதவியுடன் பால்கனிக் கதவை உடைத்து வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் சுருதி தூக்கில் சடலமாகக் கிடந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைக் கடிதம்:

சுருதியின் அடுக்குமாடிக் குடியிருப்பில் மார்ச் 20-ம் தேதியிட்ட மூன்று தற்கொலைக் கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் ஒரு கடிதம் தன் கணவருக்கும், ஒரு கடிதம் காவல்துறையினருக்கும் மற்றொன்று தன் பெற்றோருக்கும் சுருதி எழுதியிருந்திருக்கிறார். தன் பெற்றோருக்கு அவர் எழுதிய கடிதத்தில், ``நான் வாழ்ந்தால் இன்னும் பல வருடங்கள் உங்களின் துன்பத்துக்கு நான் காரணமாக இருப்பேன். இறந்துவிட்டால் அந்தச் சோகம் சில நாள்கள் மட்டுமே இருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

தற்கொலை
தற்கொலை

அதேபோல தன் கணவருக்கு எழுதிய கடிதத்தில், ``எனது வாழ்க்கையை நான் முடித்துக்கொள்ளப்போகிறேன். இதனால் இருவர் சந்தோஷமாக இருப்பார்கள். ஒன்று நீங்கள். மற்றொன்று நான். இந்தச் சித்ரவதை வாழ்க்கையிலிருந்து தப்பிப்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் வாழ்க்கையில் நான் இல்லாததால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் மற்றொரு திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டால் காது கேட்காத, பார்வையற்ற பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுங்கள். இல்லையென்றால் 20 நிமிடங்களுக்கு மேல் உங்களது சித்ரவதையை யாராலும் தாங்க முடியாது" என்று குறிப்பிட்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போலீஸ் புகார்:

இந்த விவகாரம் குறித்து சுருதியின் சகோதரர் பெங்களூரு ஒயிட்ஃபீல்டு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அந்தப் புகாரில், ``சுருதியை அவரின் கணவர் சித்ரவதை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். அவர்மீது சந்தேகப்பட்டு அவரைத் தொடர்ந்து துன்புறுத்திவந்தார். அனிஷ் படுக்கை அறை உட்பட வீடு முழுவதும் கண்காணிப்பு கேமரா வைத்திருந்தார். கடந்த ஜனவரி மாதம்கூட அவர் சுருதியைக் கொலை செய்ய முயற்சி செய்திருந்தார்" என்று தன் சகோதரியின் கணவரின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அந்தப் புகாரில் அவர் தெரிவித்திருந்தார்.

சுருதி
சுருதி

சுருதி தற்கொலை செய்துகொள்வதற்கு முந்தைய நாளான மார்ச் 19-ம் தேதிதான் அனிஷ் கேரளாவுக்குச் சென்றிருக்கிறார். தற்போது அவர் எங்கே இருக்கிறார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக கேரளா காசர்கோடு நகரில் வசிக்கும் சுருதியின் தந்தை நாராயணன், கேரளா காவல்துறையிலும் புகார் அளித்திருக்கிறார். கேரளா காவல்துறையினரும் இந்தத் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்திவருகிறார்கள்.

பிரபல பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் கணவரின் சித்ரவதையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism