Election bannerElection banner
Published:Updated:

சென்னை: `காதலனைச் சந்தித்த பிறகு அழுதுகொண்டே இருந்தாள்’-வங்கி ஊழியர் தற்கொலையின் அதிர்ச்சிப் பின்னணி

தற்கொலை செய்துகொண்ட சரண்யா, காதலன் ஐசக்
தற்கொலை செய்துகொண்ட சரண்யா, காதலன் ஐசக்

காதலனைச் சந்தித்துவிட்டு வந்த என் மகள், அழுதுகொண்டே இருந்தாள். அதன் பிறகு அவள் தற்கொலை செய்துகொண்டாள் என வங்கி ஊழியரின் தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.

சென்னை, டி.பி.சத்திரத்தைச் சேர்ந்தவர் சங்கர் (51). இவர் டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது. ``நான் மேற்கண்ட விலாசத்தில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்துவருகிறேன். நான், தனியார் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றிவருகிறேன். எனக்கு இரண்டு மகள்கள். மூத்தவள் சரண்யா (23). அவர் பி.காம் படித்துவிட்டு அண்ணாநகரிலுள்ள தனியார் வங்கியில் பணியாற்றிவந்தாள்.

காதலன் ஐசக், காதலி சரண்யா
காதலன் ஐசக், காதலி சரண்யா

சரண்யா, ஐசக் மனோஜ்குமார் என்பவரைக் காதலித்துவந்தாள். இது, எங்கள் குடும்பத்துக்குத் தெரியவந்தவுடன் ஐசக் மனோஜ்குமாரை வீட்டுக்கு அழைத்து நான் திருமணம் தொடர்பாகப் பேசினேன். இந்தநிலையில் 21.2.2021-ல் எனது மூத்த மகள், இளைய மகள் ஆகியோர் நண்பர்களோடு தனியார் மால் ஒன்றுக்குச் சென்றனர். அங்கு ஐசக் மனோஜ்குமாரைச் சந்தித்துவிட்டு வந்தனர். அதன் பிறகு சரண்யா அழுதுகொண்டே இருந்தாள். நான் என்னவென்று கேட்டபோது, `ஐசக் மனோஜ்குமார் என்னை வேண்டாம் என்று கூறிவிட்டான்’ என்று அழுதாள்.

காதல் தோல்வி; விரக்தி; துப்பாக்கிச்சூடு! - டெல்லியில் தேர்தலுக்குமுன் கொல்லப்பட்ட பெண் எஸ்.ஐ

மேலும், அவனுக்கு வேறு பெண்களோடு பழக்கம் இருப்பதாகக் கூறினாள். நான் எனது மகளுக்கு ஆறுதல் கூறினேன். 22-ம் தேதி அதிகாலை நான் தூங்கி எழுந்தபோது சரண்யா படுத்திருந்தாள், பின்னர், நான் நடைப்பயிற்சிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது சரண்யா, மின்விசிறியில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தாள். உடனே நான் சத்தம் போட்டேன். அதனால் அனைவரும் ஓடி வந்து சரண்யாவைக் கீழே இறக்கி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.

காதலி சரண்யா, காதலன் ஐசக்
காதலி சரண்யா, காதலன் ஐசக்

அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், சரண்யா ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர். எனவே, எனது மகள் சரண்யா, காதல் பிரச்னையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இறந்துவிட்டாள். எனவே ஐசக் மனோஜ்குமார் என்பவரை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

புகாரின் பேரில் எஸ்.ஐ ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து காதலன் ஐசக் மனோஜ்குமாரிடம் விசாரித்துவருகிறார். ஐசக் மனோஜ்குமார், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார்.

காதல் தோல்வியில் வங்கி ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு