Published:Updated:

`பிரபல சலூன் பியூட்டீஷியனும், அவரது கணவரும் மாறி மாறி போலீஸில் புகார்!' நடந்தது என்ன?

சென்னையில் உள்ள பிரபலமான சலூன் ஒன்றில் வேலைப்பார்த்தபோது நடந்த கசப்பான சம்பவங்களால் என் வாழ்க்கையே கேள்வி குறியாகிவிட்டது என்று அழகுக்கலை நிபுணர் கண்ணீர் மல்க புகாரளித்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த அழகுகலை நிபுணர் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது,

``சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் அஜய் சத்யா (34). இவரின் சகோதரி பிரபலமான (அழகு நிலையம்) சலூன் ஒன்றை அம்பத்தூர் பகுதியில் நடத்தி வருகிறார். அங்கு 2019-ம் ஆண்டு, 25,000 ரூபாய் சம்பளத்தில் நான் வேலைக்குச் சேர்ந்தேன். சலூனுக்குள் போன் பயன்படுத்த அனுமதியில்லை. அதனால் வெளியில் நான் போனை வைத்துவிட்டு உள்ளே செல்வேன். அப்போது நான் போன் வைத்திருந்த இடத்தில் என்னுடைய அனுமதியில்லாமல் செல்போனை எடுத்து அஜய் சத்யா பயன்படுத்தி வந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அழகு நிலையத்துக்கு வரும் பெண்களை படம் எடுத்திருக்கிறார்.

அஜய் சத்யா
அஜய் சத்யா

சலூனில் வேலைப்பார்க்கும் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை ஆபாசமாகப் படம் எடுத்திருக்கிறார். அதை பாதிக்கப்பட்ட பெண் என்னிடம் கூறி கதறி அழுதார். அதனால் வேலையிலிருந்து விலக முடிவு செய்தேன். அதை அஜய்சத்யாவிடம் கூறியபோது, அன்றைய தினம் என்னிடம் அவர் தவறாக நடந்துகொண்டார். என்னுடைய செல்போனையும் உடைத்துவிட்டார்.

கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி என்னை புதுச்சேரிக்கு கடத்திச்சென்று அஜய் சத்யா திருமணம் செய்து கொண்டார். பிறகு திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்து கொண்டோம். திருமுல்லைவாயலில் உள்ள ஒரு வீட்டில் ஒரு மாதம் வசித்து வந்தோம். அப்போதுதான் அஜய்க்கு பல பெண்களுடன் நட்பு இருப்பது தெரியவந்தது. அதுகுறித்து அஜய்யிடம் கேட்டதற்கு, 'இஷ்டம் இருந்தால் இரு, இல்லையென்றால் போய்கொண்டே இரு' என்று கூறினார். இரவு நேரத்தில் குடித்துவிட்டு வந்து தகாத வார்த்தைகளால் பேசி என்னை அடித்துத் துன்புறுத்தினார். அதனால் அவரை பிரிந்துச் சென்றுவிட்டேன்.

அழகு கலை நிபுணர், அஜய் சத்யா
அழகு கலை நிபுணர், அஜய் சத்யா

இந்தச் சூழலில் எனக்கு போன் செய்த அஜய், புதியதாக சலூன் தொடங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும் என்று கூறி வரதட்சணையாக பணம் கேட்டார். மேலும் அஜய்க்கும் சலூனில் வேலைப்பார்க்கும் பெண் ஒருவருக்கும் பழக்கம் உள்ளது. அதுகுறித்து நான் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தேன். அதன்பேரில் போலீஸார் அஜய் சத்யா, இளம் பெண்ஒருவர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். அஜயிடம் விசாரித்தால் இன்னும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து அஜய் சத்யாவிடம் கேட்டதற்கு, ``இந்தச் சலூனில் சிசிடிவி கேமராக்கள் உள்ளதால் கவிதா சொல்வதைப் போல எதுவும் தப்பாக நடக்க வாய்ப்பில்லை. திருமணமான ஒரு மாதத்திலேயே கவிதா, என்னைப் பிரிந்துச் சென்றுவிட்டார். நானும் கவிதாவும் இருக்கும் தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டி என்னிடமிருந்து பணம் பெற்றுவந்தார். அதனால்தான் கவிதா மீதும் அவளின் ஆண் நண்பர் மீதும் புகாரளித்திருக்கிறேன். கவிதா, தனக்கு நடந்த முதல் திருமணத்தை மறைத்து என்னை .ஏமாற்றி திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அதனால் கவிதாவை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறேன்" என்றார்.

முதல் தகவல் அறிக்கை
முதல் தகவல் அறிக்கை
சென்னை: `திருமணமான பெண்ணுடன் நட்பு; கணவர் புகார்!' - காவலர் தற்காலிகப் பணியிடை நீக்கம்

இதுகுறித்து கவிதாவிடம் கேட்டதற்கு, ``இந்தச் சலூனின் தலைமையகம் லண்டனில் உள்ளது. பிரபலமான சலூன் என்பதால்தான் அங்கு வேலைக்குச் சேர்ந்தேன். நான் சலூனில் துணியை மாற்றும்போது எனக்குத் தெரியாமல் என்னை அஜய் சத்யா வீடியோ எடுத்து மிரட்டினார். அதன்பிறகுதான் என்னை அவர் திருமணம் செய்து கொண்டார். அந்தச் சலூனில் நடந்த கசப்பான அனுபவங்களால் என் வாழ்க்கையே கேள்வி குறியாகிவிட்டது. அந்த சலூனில் போலீஸாரும், வருவாய் துறையினரும் சோதனை நடத்தினால் உண்மைகள் வெளிவரும். சலூனில் நடப்பதை வெளியில் சொல்லும் ஊழியர்களை அஜய் வேலையிலிருந்து நீக்கி வருகிறார். அஜய் சத்யாவுக்கு பின்னணியில் ஒரு டீமே செயல்பட்டு வருகிறது" என்றார். கவிதா, அஜய்சத்யா கொடுத்திருக்கும் புகார்களின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு