Published:Updated:

போதையால் நடந்த இருவேறு கொலைகள்... காஞ்சியில் அண்ணன்; திருவேற்காட்டில் தந்தை - அதிர்ச்சி சம்பவங்கள்

கொலை

காஞ்சிபுரத்தில் போதை காரணமாக அண்ணனைக் கொலை செய்த வழக்கில் மாணவன் கைது செய்யப்பட்டான். இந்த அதிர்ச்சி மறைவதற்குள் திருவேற்காடு பகுதியில் தந்தையைக் கொலை செய்த குற்றத்துக்காக மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதையால் நடந்த இருவேறு கொலைகள்... காஞ்சியில் அண்ணன்; திருவேற்காட்டில் தந்தை - அதிர்ச்சி சம்பவங்கள்

காஞ்சிபுரத்தில் போதை காரணமாக அண்ணனைக் கொலை செய்த வழக்கில் மாணவன் கைது செய்யப்பட்டான். இந்த அதிர்ச்சி மறைவதற்குள் திருவேற்காடு பகுதியில் தந்தையைக் கொலை செய்த குற்றத்துக்காக மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
கொலை

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை திருவேகம்பன் நகரைச் சேர்ந்தவர் செல்வராணி. இவர் தலைமை ஆசிரியராக வேலைப்பார்த்து வருகிறார். இவரின் கணவர் பிரபுதாஸ், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அதனால் தன்னுடைய இரண்டு மகன்களுடன் செல்வராணி வசித்து வந்தார். செல்வராணியின் மூத்த மகன் வின்சென்ட். மூத்த மகன் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இளையமகன், பிளஸ் 2 படித்து வருகிறார்.

வின்சென்ட்
வின்சென்ட்

இளைய மகன் ஷெர்லி ஜான், போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. அதை குடும்பத்தினரும் கண்டித்தும் மாணவன் திருந்தவில்லை. சம்பவத்தன்று போதையில் ஷெர்லி ஜான் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மகனை செல்வராணி கண்டித்துள்ளார். அதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் செல்வராணியை ஷெர்லி ஜான் தாக்கியுள்ளார். அதைப்பார்த்த மூத்த மகன் வின்சென்ட், தம்பியைக் கண்டித்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த ஷெர்லி ஜான் போதையில் வீட்டில் காய்கறிகளை வெட்ட பயன்படுத்தும் கத்தியை எடுத்து அண்ணன் வின்சென்ட்டை சரமாரியாக குத்தியுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய வின்சென்ட்டை, அவரின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், விசாரணை நடத்தி ஷெர்லி ஜானைக் கைது செய்தனர். அவருக்கு 19 வயதானதால் சிறையில் அடைத்தனர். இந்த அதிர்ச்சி சம்பவத்தின் சுவடு மறைவதற்குள் திருவேற்காடு பகுதியில் இன்னொரு கொலை போதை காரணமாக நடந்துள்ளது.

டிரைவர் பிரகாஷ்
டிரைவர் பிரகாஷ்

சென்னை திருவேற்காடு, காமதேனு நகரை சேர்ந்தவர் டில்லி(63). இவரின் மகன் பிரகாஷ்(35). டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி தேவி. கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் பிரகாஷ் போதைக்கு அடிமையானதால் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். அதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் மனவேதனையடைந்த தேவி, அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்தநிலையில் மதுபோதையில் பிரகாஷ், வீட்டுக்கு வந்துள்ளார். அதை டில்லி தட்டிக்கேட்டுள்ளார். இதனால் தந்தை என்று பாராமல் டில்லியை கீழே தள்ளி விட்டுள்ளார் பிரகாஷ். இதில் தலையில் பலத்த காயமடைந்த டில்லி, உயிரிழந்தார். இதுகுறித்து திருவேற்காடு போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து பிரகாஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.