Published:Updated:

மது, நெட்ஃபிளிக்ஸ், சிகரெட், சாப்பாடு... ஷ்ரத்தாவை 10 மணி நேரமாக 35 துண்டுகளாக வெட்டிய அல்தாஃப்!

அல்தாஃப்புடன் ஸ்ரத்தா

டெல்லியில் இளம்பெண்ணைக் கொலை செய்த அல்தாஃப் பூனாவாலா பீர் குடித்துக்கொண்டும், சாப்பிட்டுக்கொண்டும் உடல் பகுதியை 35 துண்டுகளாக வெட்டியதாக விசாரணையில் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

மது, நெட்ஃபிளிக்ஸ், சிகரெட், சாப்பாடு... ஷ்ரத்தாவை 10 மணி நேரமாக 35 துண்டுகளாக வெட்டிய அல்தாஃப்!

டெல்லியில் இளம்பெண்ணைக் கொலை செய்த அல்தாஃப் பூனாவாலா பீர் குடித்துக்கொண்டும், சாப்பிட்டுக்கொண்டும் உடல் பகுதியை 35 துண்டுகளாக வெட்டியதாக விசாரணையில் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
அல்தாஃப்புடன் ஸ்ரத்தா

டெல்லியில் ஷ்ரத்தா என்ற பெண்ணை, அவருடன் சேர்ந்து வாழ்ந்த பார்ட்னர் அல்தாஃப் பூனாவாலா கடந்த மே 18-ம் தேதி கொலைசெய்து, 35 துண்டுகளாக வெட்டிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொலை ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்தக் கொலை தொடர்பாக டெல்லி போலீஸார் அல்தாஃபை கைதுசெய்து விசாரித்துவருகின்றனர். அல்தாஃப் அடிக்கடி தனது வாக்குமூலத்தை மாற்றிக்கொண்டேயிருக்கிறான் என்கிறது போலீஸ். எனவே, அவனுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த டெல்லி போலீஸார் முடிவுசெய்துள்ளனர். நீதிமன்றம் அல்தாஃப்பின் போலீஸ் காவலை மேலும் ஐந்து நாள்கள் நீட்டித்து உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கொடுத்திருக்கிறது. போலீஸாரின் விசாரணையில் கொலைசெய்யப்பட்ட ஷ்ரத்தாவின் தலை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

மது, நெட்ஃபிளிக்ஸ், சிகரெட், சாப்பாடு... ஷ்ரத்தாவை 10 மணி நேரமாக 35 துண்டுகளாக வெட்டிய அல்தாஃப்!

அடையாளம் தெரியாமல் இருக்கவேண்டும் என்பதற்காக முகத்தை எரித்துவிட்டதாக அல்தாஃப் போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறான். அல்தாஃப்பிடம் நடத்திய விசாரணை குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``மே 18-ம் தேதி ஷ்ரத்தாவைக் கொலைசெய்த பிறகு, மறுநாள் காலையில் ஃபிரிட்ஜ், பிளாஸ்டிக் கவர், கத்தி போன்றவற்றை வாங்கி வந்திருக்கிறான்.

பின்னர் பீர் வாங்கி வந்து குடித்துக்கொண்டே உடலைப் பல துண்டுகளாக வெட்டியிருக்கிறான். அதோடு வெட்டும்போது அடிக்கடி நெட்ஃபிளிக்ஸில் படமும் பார்த்துக்கொண்டே இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறான். உடலைத் துண்டு துண்டாக வெட்டும்போது அடிக்கடி இடைவெளிவிட்டு அந்த நேரத்தில் பீர் குடிப்பது, சிகரெட் புகைப்பது போன்ற வேலையில் ஈடுபட்டிருக்கிறான். இடையிடையே இடைவெளிவிட்டு உடல் உறுப்புகளை வெட்டியதால் அதை 35 துண்டுகளாக வெட்டி முடிக்க 10 மணி நேரம் எடுத்துக்கொண்டதாக அல்தாஃப் தெரிவித்திருக்கிறான்.

ஒவ்வோர் உடல் உறுப்பையும் வெட்டிய பிறகு அதில் ரத்தக்கசிவு இருக்கக் கூடாது என்பதற்காக நன்றாகக் கழுவியிருக்கிறான். உடல்களை வெட்டி முடித்த பிறகு தேவையான உணவை ஜொமோட்டோவில் ஆர்டர் செய்து நெட்ஃபிளிக்ஸில் படம் பார்த்துக்கொண்டே சாப்பிட்டதாகத் தெரிவித்திருக்கிறான்” என்றார்.

ஷ்ரத்தாவைக் கொலைசெய்து, உடலைப் பல துண்டுகளாக வெட்டிய பிறகு எந்தவிதமான ரத்தக்கறையும் இருக்கக் கூடாது என்பதற்காக ரசாயானக் கலவையைப் பயன்படுத்தி சுத்தம் செய்திருந்தான். ஆனாலும் தடயவியல் அதிகாரிகள் கொலை நடந்த வீட்டை முழுமையாகச் சோதனை செய்ததில், சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன. வீட்டைக் கழுவவும், உடலைச் சுத்தப்படுத்தவும் அதிகப்படியான தண்ணீரை அல்தாஃப் பயன்படுத்தியிருக்கிறான்.

மது, நெட்ஃபிளிக்ஸ், சிகரெட், சாப்பாடு... ஷ்ரத்தாவை 10 மணி நேரமாக 35 துண்டுகளாக வெட்டிய அல்தாஃப்!

அதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகப்படியான தண்ணீர் பில் வந்திருக்கிறது. அதிகாரிகளுக்கு இது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு சமையல் அறையில் ரத்தக்கறை இருப்பதை தடயவியல் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அல்தாஃப் வீட்டில் ரம்பம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. உடலை வெட்டுவதற்கு அதை அல்தாஃப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த வழக்கில் இந்த ரம்பம் முக்கிய ஆதாரமாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்.

அல்தாஃப் வீட்டை ஆய்வுசெய்த தடயவியல் அதிகாரி இது குறித்து கூறுகையில், ``அல்தாஃப் வீட்டில் இருந்த அனைத்து ஆதாரங்களையும் அகற்றிவிட்டான். ஃபிரிட்ஜ் முதல் அனைத்துப் பகுதிகளையும் சுத்தமாக ரசாயானங்களைக்கொண்டு கழுவியிருக்கிறான். சமையல் அறையில் மட்டும் ரத்தக்கறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் சோதனைக்குப் பிறகுதான் தெரியவரும்” என்று தெரிவித்தார். இந்த வழக்கில் இதுவரை போலீஸாருக்கு முக்கிய ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. காட்டில் சில எலும்புகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. அல்தாஃப் டெல்லிக்கு வருவதற்கு முன்பு ஷ்ரத்தாவுடன் இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்டுக்குச் சென்றிருந்தான். எனவே, அல்தாஃபை அங்கு அழைத்துச் சென்று விசாரிக்கவும் முடிவுசெய்துள்ளனர் போலீஸார்.