Published:Updated:

வீட்டு உரிமையாளர் கொலை; 91 முறை கத்திக்குத்து; காவல்துறைக்கே டஃப் கொடுத்த கொலையாளி - நடந்தது என்ன?

கொலை

கர்நாடக மாநிலத்தில் வீட்டு உரிமையாளரை 91 முறை கத்தியால் குத்திக் கொலை செய்தவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

வீட்டு உரிமையாளர் கொலை; 91 முறை கத்திக்குத்து; காவல்துறைக்கே டஃப் கொடுத்த கொலையாளி - நடந்தது என்ன?

கர்நாடக மாநிலத்தில் வீட்டு உரிமையாளரை 91 முறை கத்தியால் குத்திக் கொலை செய்தவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
கொலை

கர்நாடக மாநிலம், பெங்களூரிலுள்ள பனசங்கரி பகுதியில் வசிப்பவர் ஜெய்கிஷன் (29). இவரின் வீட்டு உரிமையாளர் யசோதாம்மா இறந்துகிடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அதில் யசோதம்மா, 91 முறை கத்தியால் குத்தப்பட்டதால் இறந்திருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து காவல்துறை தீவிரவிசாரணை மேற்கொண்டதில் யசோதம்மா வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த ஜெய்கிஷன்தான் கொலை செய்தது என்பது தெரியவந்தது.

விசாரணை
விசாரணை

அவரை விசாரித்தது தொடர்பாக காவல்துறை அதிகாரி பி.கிருஷ்ணகாத் கூறுகையில், "கொலை நடந்த சம்பவ இடத்தில் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. அதனால் கிட்டத்தட்ட 100 பேருக்கும் மேல் விசாரணையை விரிவுபடுத்தினோம். கொலை தொடர்பான புகாரளிக்கும்போதும், யசோதம்மாவின் இறுதிச் சடங்கிலும் ஜெய்கிஷன்உடனிருந்தார். அதனால் அவர்மீது எந்தச் சந்தேகமும் வரவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன் பிறகே அவர் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டோம். அதில், விற்பனை அதிகாரியாகப் பணிபுரியும் ஜெய்கிஷன் பங்குச் சந்தையில் ரூ.12 லட்சத்தை இழந்திருக்கிறார். மேலும், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் ரூ.12 லட்சம் கடன்பெற்றிருக்கிறார்.

கைது
கைது

யசோதாம்மாவும் ஜெய்கிஷனுக்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்திருக்கிறார். அதை யசோதம்மா திருப்பிக் கேட்டபோது இருவருக்கும் சண்டை நடந்ததாகத் தெரிகிறது. இந்த ஒட்டுமொத்தக் கடனையும் திருப்பி கொடுக்க யசோதாம்மாவின் நகைகளைத் திருட ஜெய்கிஷன் முடிவுசெய்து அவரைக் கொலை செய்தது தெரியவந்திருக்கிறது. மேலும், யசோதம்மாவின் நகைகளைத் திருடி அடகுவைத்ததைக் கண்டுபிடித்த பிறகே அவர்தான் கொலையாளி என்பது உறுதியானது. தற்போது அவரைக் கைதுசெய்து விசாரித்துவருகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.