Published:Updated:

1,200 வீடியோக்கள்; மொபைலில் தனி ஃபோல்டர் - மாணவிகள் கழிவறையில் வீடியோ எடுத்த மாணவன் கைது!

ஆபாச வீடியோ ( மாதிரிப் படம் )

பெங்களூரு பல்கலைக்கழகமொன்றில், மாணவிகள் கழிப்பறையை எட்டிப்பார்த்த மாணவனிடம் போலீஸார் விசாரித்தபோது அவனது செல்போனில் அது தொடர்பான 1,200 ஆபாச வீடியோக்கள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

1,200 வீடியோக்கள்; மொபைலில் தனி ஃபோல்டர் - மாணவிகள் கழிவறையில் வீடியோ எடுத்த மாணவன் கைது!

பெங்களூரு பல்கலைக்கழகமொன்றில், மாணவிகள் கழிப்பறையை எட்டிப்பார்த்த மாணவனிடம் போலீஸார் விசாரித்தபோது அவனது செல்போனில் அது தொடர்பான 1,200 ஆபாச வீடியோக்கள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
ஆபாச வீடியோ ( மாதிரிப் படம் )

பெங்களூருவில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில், மாணவிகள் கழிப்பறையை எட்டிப்பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட மாணவனை போலீஸார் கைதுசெய்து விசாரித்ததில், அவனது செல்போனில் சுமார் 1,200 ஆபாச வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாபு (21) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்று அந்த மாணவன், வணிக நிர்வாகம் மற்றும் சட்டம் பயிலும் மூன்றாமாண்டு மாணவர்.

ஆபாச வீடியோ எடுத்த மாணவன் கைது!
ஆபாச வீடியோ எடுத்த மாணவன் கைது!

கடந்த நவம்பர் 13-ம் தேதியன்று மாணவிகள் கழிப்பறையை மாணவன் ஒருவன் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்ததாக, கல்லூரி நிர்வாகத்திடம் இரண்டு மாணவிகள் புகாரளித்திருக்கின்றனர். ஆனால் அப்போது அந்த மாணவன் யாரென்று தெரியவில்லை. பின்னர் இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் போலீஸில் புகாரளித்திருக்கின்றது. அதைத் தொடர்ந்து நவம்பர் 16-ம் தேதியன்று அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆராய்ந்ததில், அங்கிருந்தது பாபு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து பாபுவை, `அங்கு என்ன செய்துகொண்டிருந்தாய்?' என போலீஸார் விசாரித்தபோது, ரகசிய கேமரா மூலம் கழிப்பறைக்கு வரும் மாணவிகளை வீடியோ எடுத்ததை அந்த மாணவன் ஒப்புக்கொண்டான்.

ஆபாச வீடியோ
ஆபாச வீடியோ
மாதிரிப் படம்

பின்னர் பாபுவின் செல்போனை வாங்கி போலீஸார் சோதனை செய்ததில் அது தொடர்பான 1,200 ஆபாச வீடியோக்கள் அதிலிருந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக பாபு மீது வழக்கு பதிவுசெய்த போலீஸார், அவனைக் கைதுசெய்தனர். மேலும் அது போன்ற வீடியோக்களுக்கெனவே செல்போனில் தனி ஃபோல்டரை(folder) அந்த மாணவன் வைத்திருந்ததாக போலீஸார் கூறினார்.

இந்தச் சம்பவத்துக்கு முன்னதாக பாபு ஏற்கெனவே, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் `இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன்' என மன்னிப்பு கடிதம் எழுதியிருக்கிறான் என்றும், பின்னர் தொடர்ந்து இதுபோன்ற செயல்களை செய்துவந்தான் என்றும் கூறப்படுகிறது.